பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

93

அவருடைய கண்ணையும் கருத்தையும் ஈர்த்தது என்பதில் வியப்பில்லை. எனவே, இவர் இச்சிற்பச் சிறப்பை மேற்சொன்ன இரண்டு பாக்களில் சித்தரித்து விட்டார் போலும்!

பழையாறையில் உருவச்சிலைகள். இறைவனது கோவணத்துண்டை ஒரு தட்டில் வைத்து, அதற்கு ஈடாக அமர்நீதியார் தம் செல்வங்களை எல்லாம் மற்றொரு தட்டில் வைத்தும் இரண்டும் சமமாக நிற்கவில்லை. ஆதவின் அவரும் மனைவியரும் இறைவனைத் தொழுது மற்றொரு தட்டில் ஏறினர். இரு தட்டுகளும் நேர்நின்றன என்பது நம்பியாண்டார் நம்பி கூற்று. ஆயின் சேக்கிழார், நாயனாரும் மனைவியாரும் இவர் தம் ஒரே புதல்வருடன் தட்டில் ஏறினர் என்று குறித்தார். சேக்கிழார் கூற்றில் புதிதாகப் 'புத்திரர் சேர்க்கப்பட்டதேன் அங்ங்னம் சேர்க்க காரணம் என்ன?

அமர்நீதி நாயனாரது திருப்பதியாகிய பழையாறையில் உள்ள வடதளியில் - அமர்நீதி நாயனார். அவர் மனைவியார் இவர் தம் உருவச்சிலைகள் உள்ளன. அம்மையார் கைகளில் குழந்தை காண்கிறது. இவை கல் உருவங்கள். இவற்றைத் தவிரச் சேக்கிழார் கூற்றுக்கு வேறு சான்று இருந்ததென்று கூறக்கூடவில்லை. நாயன்மார் வாழ்ந்த இடத்துக் கோவில்களில் அவர் தம் உருவச் சிலைகளை எழுப்பி வழிபடல் பண்டை மரபு என்பது முன்பே குறிக்கப்பட்டதன்றோ? அம்மரபுப்படி பழையாறையில் எழுந்தருளப் பெற்றிருந்த, உருவச்சிலைகளைப் பார்த்தே சேக்கிழார் இப்புதிய செய்தியைச் சேர்த்தனர் என்று கொள்ள வேண்டும். அங்ஙனம் கொண்டால், சேக்கிழார் கேவலம் தலங்களைக் கண்டதோடு திருப்தி கொள்ளாமல், ஒவ்வொரு