பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

சேக்கிழார்

கோவிலிலும் உள்ள நாயன்மார் உருவச்சிலைகளையும் நன்றாகக் கவனித்துக் குறிப்புகள் தயாரித்தவர் என்பது நன்கு வெளியாகும்.

திருமடங்கள்.இன்னின்ன ஊர்களில் மடங்கள் இருந்தன என்பது திருமுறைகளில் குறிக்கப்படவில்லை. நாயன்மார் காலத்தில் எங்கெங்கு மடங்கள் இருந்தன என்று கூறத்தக்க வேறு நூலும் இல்லை. ஆனால் சேக்கிழார் காலத்தில் தமிழ் நாட்டில் பழையயனவும் புதியனவுமாகப் பல மடங்கள் இருந்தன. திருஆவடுதுறை, திருவதிகை போன்ற சிற்ந்த பதிகளில் பலமடங்கள் இருந்து சைவப்பணி ஆற்றிக் கொண்டு இருந்தன. சாதாரணப் புலவன் இங்ங்னம் விரவி இருந்த பை ழய-புதிய மடங்கள் எல்லாம் நாயன்மார் காலத்தில் இருந்தனவாகக் கொண்டு நூல்பாடி விடுவான். அங்ங்னம் சேக்கிழார் மயங்கிக் கூறியிருப்பினும், அவர் தவறு செய்தார் என்பதைப் பிறர் அறிதலும் அருகை. அங்ங்ணம் இருந்தும், பொறுப்பு வாய்ந்த அப்பெரும் புலவர் எல்லாப் பழைய மடங்களைப் பற்றியும் கூறவில்லை; புதிய மடங்களைப் பற்றியும் கூறவில்லை. அவர் திருவதிகை, சித்தவடம், திருநல்லூர், சிகாழி, திருப்புகலூர், திருக்கடவூர், திருமறைக்காடு, திருப்பூந்துருத்தி, திங்களுர், திருமருகல், திருவாரூர், திருவீழிமிழலை, மதுரை, காஞ்சி, காளத்தி, ஒற்றியூர் முதலிய சில இடங்களிற்றாம் நாயன்மார் காலத்தில் மடங்கள் இருந்தன என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார். இவற்றுள். (1) திருவதிகையில் இருந்து சேக்கிழாராற் குறிக்கப்பட்ட திலகவதியார் திருமடம் இன்று அழிந்த நிலையிற் கிடக்கின்றது. (2) திருப்பூந்துருத்தியில் அப்பரால் அமைக்கப்பட்ட திருமடம் என்று சேக்கிழார் குறித்த மடம் ஒன்று. இன்று இடிந்து காணப்படுகிறது. (3) இவ்வாறே அமர்நீதி நாயனார் திருமடம் என்று சேக்கிழார் குறித்த