பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

95

மடம் ஒன்று திருநல்லூரில் பாழ்பட்டுக் கிடத்தலைக் காணலாம். காஞ்சியில் திருமேற்றளியை அடுத்து மடம் இருந்தது என்று பல்லவர் காலத்துக் கல்வெட்டே குறித்தலை முன்பு கண்டோம் அல்லவா? அங்ஙனமே திருவொற்றியூரிலும் திருமடம் இருந்ததைப் பல்லவர் கல்வெட்டே உறுதிப்படுத்துகிறது. இவற்றை நோக்கக் கல்வெட்டிற் குறிக்கப்படும் சந்தர்ப்பம் பெறாத மேற்சொன்ன மடங்கள் இருந்தில என்று கூறக் கூடுமா? சேக்கிழார் பெருமான் தமது தல யாத்திரையின்போது, 'இன்னின்ன திருமடம் நாயன்மார் காலத்தது என்பதை நன்கு விசாரித்து அறிந்தமையாற்றான் பலவற்றையும் குழப்பிக் கூறாது, தெளிவாக மேற்சொன்ன திருமடங்களை மட்டும் குறித்துப் போந்தார் என்று கொள்வதே அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது.

கோவில்கள். நாயன்மார் காலத்தில் பாடல் பெற்ற கோவில்களாக இருந்தவற்றின் உண்மையான தொகை நமக்குத் தெரியவில்லை. தேவார ஏடுகள் நம்பிக்கு முன்னும் நம்பிக்குப் பின்னும் பல அழிந்து விட்டன. அவ்வளவோ? சேக்கிழார்க்குப் பிறகும் பல பதிகங்கள் ஒழிந்தன என்பது சேக்கிழார் கூற்றாலேயே அறியலாம். போனவை போக, இன்றுள்ள திருமுறைகளைக் கொண்டு காண்கையில், பாடல் பெற்ற கோவில்கள் ஏற்த்தாழ 300 இருந்தன என்பது தெரிகிறது. அவற்றுட் பல.சோழர் காலத்திற் பெருஞ் சிறப்பு அடைந்தன. பல கோவில்கள் புதிய கோபுரங்களைக் கொண்டு விளங்கின. அங்ங்ணம் இருந்தும் சேக்கிழார், 'மதுரைக் கோவில்' திருமுதுகுன்றக் கோவில், காஞ்சிஏகாம்பரநாதர் கோவில்,தில்லைக்கூத்தப்பிரான் கோவில் போன்ற சிலவே நாயன்மார் காலத்திற் கோபுரத்துடன் விளங்கினவை மற்றவை கோபுரம் அற்றவை' என்று