பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

சேக்கிழார்

தெளிவாகக் கூறியுள்ளது நோக்கத் தக்கது. அவர், 'எல்லாக் கோவில்கட்கும் கோபுரம் உண்டு என்று பாடியிருப்பின், 'அது தவறு' என்று கூறத்தக்கவர் ஒருவரும் இல்லை அல்லவா? அங்ங்னம் இருந்தும், 300 கோவில்களில் ஏற்ககுறைய 30 கோவில்களே கோபுரம் கொண்டனவாக இருந்தன என்று அவர் கூறுதல் - அவரது தலயாத்திரை நுட்பத்தை நமக்கு நன்கு அறிவிக்கும் சான்றாகும்.

முடிவுரை.'தாம் வரையப்புகும் நூலிற் குறிக்கத் தக்க இடங்களைப்பற்றிய செய்திகள் அனைத்தையும் நேரிற் சென்று கண்டு உள்ளவாறு உணர்ந்து வரைதலே சாத்திரீய வரலாற்று ஆசிரியரது சிறப்பியல்பு என்று இன்று மேனாட்டு நிபுணர் குறிக்கும் இலக்கணம், நம் தமிழ்ப் பெரும் புலவராகிய சேக்கிழாரிடம் இன்றைக்கு 800 ஆண்டுகட்கு முன்னரே குடி கொண்டிருந்தது என்பதைக் காட்ட, இதுகாறும் கூறிய ஒவ்வொரு செய்தியும் தக்க சான்றாதல் காணலாம்.

8.சேக்கிழாரும் வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் வரலாறுகளும்

முன்னுரை.பொறுப்புள்ள பதவியில் இருக்கும் எந்த நூலாசிரியனும் தனது நூலை இயன்றவரை உண்மைக்கு மாறாக வரையத் தலைப்படான் பொறுப்பற்றவன் வேண்டும் விகற்பங்களைக் கூறி நூலைப் பெரிதாக்கிப் பலவகை அபூத கற்பனைகளைப் புகுத்தி விடுவான். சேக்கிழார் பொறுப்புள்ள தலைமை அமைச்சர் பதவியில் இருந்தமையின், பொறுப்புணர்ச்சியோடு நாயன்மார்