பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

97

வரலாறுகளை எழுத விரும்பினார். அதற்றான் தமிழகம் முழுவதும் சுற்றிக் குறிப்புகள் திரட்டினார். அவர் அமைச்சராக இருந்தமையின், அரசியல் அறிவுடையவராக இருந்தவர் என்று கோடல் முறையே ஆகும். அவர் அவ்வரசியற் கண்கொண்டு 63 நாயன்மாரைக் கவனித்ததில், கிழ்வரும் விவரங்களைக் கண்டனர். 63 நாயன்மாருள்.

1. சேரர் ஒருவர் - சேரமான் பெருமாள் நாயனார்:

2. சோழர் இருவர் - (1) கோச்செங்கட் சோழர், (2) புகழ்ச்சோழர்:

3. பாண்டியர் ஒருவர் - நின்றசீர் நெடுமாற நாயனார்:

4. மங்கையர்க்கரசியார் - சோழன் மகளும் பாண்டியன் மனைவியுமாவார்:

5. பல்லவர் இருவர் - (1) ஐயடிகள் காடவர்கோன் (2) கழற்சிங்கர்’

6. களப்பிரர் ஒருவர் - கூற்றுவ நாயனார்:

7. சிற்றரசர் நால்வர் - (1) திருக்கோவலூரைத் தலைநகராகப் பெற்ற மலைநாட்டை யாண்ட மெய்ப்பொருள் நாயனார், (2) திருநாவலூரைத் தலைந்கராகக் கொண்ட திருமுனைப்பாடிநாட்டையாண்ட் நரசிங்க முனையரையர், (3) கொடும்பாளுரைத் தலைநகராகக் கொண்ட கோனாட்டை (புதுக்கோட்டை சிமையை) ஆண்ட இடங்கழி நாயனார், (4) சோழநாட்டின் உட்பகுதிகளுள் ஒன்றான மிழலை நாட்டை ஆண்ட குரும்பநாயனார்:

8. பல்லவர் படைத்தலைவர் பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டர்.