பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

சேக்கிழார்

9.சோழர் படைத்தலைவர் மூவர் - (1) கோட்புலி நாயனார், (2) மானக்கஞ்சாற நாயனார், (3) கலிக்காம நாயனார்.

10.பாண்டிய அமைச்சர் - குலச்சிறையார்.

11.களப்பிரர் குழப்ப காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மூர்த்தி நாயனார் என்பவராவர்.

இவ்வாறு 63 நாயன்மாருள் அரசியல் தொடர்பு கொண்டோர் 18 பேர். ஆவர். இவர்கள் வரலாறுகளை இயன்றவரை அவ்வம் மரபினரைக் கேட்டுக் குறிப்புகள் தொகுத்தல் நல்லதன்றோ? சேக்கிழார் இவ்வரசியல் கண்கொண்டு ஏனைய நாயன்மார் வரலாறுகளை ஆராய்ந்தபொழுது மேலும் பல புதிய அரசர்களைப்பற்றி அறியவேண்டியவர் ஆனார். அவர்கள் -

1.அப்பரது வரலாற்றிற் குறிக்கப்பட்ட மகேந்திரவர்மன் என்ற பல்லவன்;

2.பூசலார் புராணத்திற் கூறப்பட்ட இராசசிங்கன் என்ற பல்லவன்;

3.தண்டியடிகள் வரலாற்றிற் சொல்லப்பட்ட சோழ அரசன்;

4.அப்பரைக் கண்டு லிங்கத்தை மறைத்த சமணரைத் தண்டித்து லிங்கத்தை வெளிப்படுத்திய சோழ அரசன்;

5.திருப்பனந்தாளில் யானைகளைக் கொண்டு லிங்கத்தை நிமிர்த்த முயன்ற-குங்கிலியக் கலயரைப் பணிந்து பாராட்டிய சோழ அரசன்;

6.சுந்தரர் காலத்தில் பாண்டியனுடன் இருந்த அவன் மருமகனான சோழ அரசன் என்பவர் ஆவர்.