பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

99

இங்ஙனம் அரசியல் தொடர்புடையார் பலருடைய உண்மை வரலாறுகளை அறியவேண்டிய பொறுப்பு சேக்கிழாரைச் சேர்ந்தது. இவர்களைப் பற்றித் தம் மனம் போனவாறு அவர் நூல் பாடியிருப்பின், இவர்களைச் சேர்ந்த - சேக்கிழார் காலத்தில் இருந்த அரச மரபினர் . அவர் நூலை மதிக்க வழியில்லை அல்லவா? ஆதலின், அந்தந்த அரச மரபினரும் ஏற்றுக் கொள்ளத்தக்க நிலையில் தமது பெருநூல், உண்மைச் செய்திகள் பொருந்தியதாக இருத்தல் வேண்டும் என்ற கவலை, பொறுப்புள்ள சேக்கிழார்க்கு உண்டாகி இருத்தல் வேண்டும் என்று நாம் நினைப்பதில் தவறில்லை. இனி, இவ்வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார்களைப் பற்றியும், அரசர்களைப் பற்றியும் சேக்கிழார் கூறும் குறிப்புகள் இன்றளவும் நமக்குக் கிடைத்துள்ள கல்வெட்டுச் செய்தி கட்குப் பொருந்தியனவாக உள்ளனவா என்பதையும், இப்பெரும் புலவர் எந்தச் சான்றுகள் கொண்டு இவர்கள் வரலாறுகளைப் பாடியிருத்தல் கூடும் என்பதையும் ஒருவாறு ஆராய்வோம்.

மூர்த்தி நாயனார்.'இவர் காலத்திற்றான் வடுகக் கருநாடர்வேந்தன் ஒருவன் கடல்போன்ற சேனையோடு வந்து பாண்டியனை விரட்டி நாட்டைக் கைக்கொண்டான், அவன் சைவன் அல்லன். ஆதலின், சிவன் கோவில்கட்குத் திங்கு செய்தான் நாளும் சொக்கநாதர் கோவிலுக்குச் சந்தனம் அரைத்து உதவி வந்த மூர்த்தி நாயனாருக்குச சந்தனம் கிடைக்காதவாறு செய்தான்' என்பது சேக்கிழார் குறிப்பாகும்.

இங்ஙணம் பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் கைப்பற்றி ஆண்டவன் களப்பிரகுல காவலனான 'அச்சு விக்கந்தன்' என்பது தமிழ் நாவலர் சரிதை, புத்ததத்தர் கூற்று, வேள்விக்குடிப் பட்டயம் இவற்றால் அறியப்படும்