சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் - 103 "பயணத்திற்கு ஆயத்தமாக வந்து இருக்கிறாயா என்று பெரியவர் இளையவரைப் பார்த்துக் கேட்டார். ஆமாம் என்று இளையவர் சொன்னவுடன் இருவரும் சத்திரத்திற்கு திரும்பிவிட்டனர். இன்று அதிகாலையில் இருவரும் புறப்பட்டு கன்னியாகுமரி சாலையில் சென்றனர். அவர்களது நடவடிக்கை சந்தேகபப்படும்படியாக இருந்தது. இயாவிடம் சொல்லிவிட்டு. ." ஆறுமுகம் சேர்வை சொல்லி முடிப்பதற்குள், "அடடா, இவர்கள் சம்பந்தமாகத்தான இராமநாதபுரம் கோட்டைக்குச் சென்று இருந்தேன். இலங்கையில் இருந்து நம் நாட்டிற்குள் உளவாளிகள் வந்துள்ளனராம். . . நீர் சொன்ன இருவரும் அவர்களாகத்தான் இருக்க வேண்டும். ஆமாம் இப்பொழுது எவ்வளவு தூரம் நடந்து போயிருப்பார்கள்?" "இன்று வெயில் கடுமையாக இருப்பதால் இதுவரை சாயல்குடிபோய்ச் சேர்ந்திருக்கலாம். ஒருவேளை அங்கு சத்திரத்தில் தங்காமல் தொடர்ந்து போயிருந்தால் குரங்குடியை நெருங்கி இ * ம" நர் சொல்வது பொதுவாக சேது தீர்த்தப் பயணிகள் செல்லும் பாதை, ஆனால் அவர்கள் தளபதி சொன்ன உளவாளியாக இருந்தால், துரத்துக்குடி போகமாட்டார்கள். நமது நாட்டுக்குள்தான் வேறு பகுதிக்குள் சென்று இருப்பார்கள்." "ஐயா சொல்வதும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஒருவேளை அவர்கள் கடுகு சந்தை விலக்குப் பாதையில் மாரின், ஒப்பிலான் போவதற்கும் வாய்ப்பு உள்ள து." "நாம் ஒப்பிலானுக்கே செல்வோம். வீரர்களிடம் சொல்லி மாற்றுக் குதிரைகளுக்கு ஏற்பாஸ்டு செய்யுங்கள். உடனே போக வேண்டும்"
பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/115
Appearance