இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
104 எஸ்.எம்.கமால் ஆறுமுகம் சேர்வை சத்திரத்து முகப்பிற்கு ஓடினார். சில நிமிடங்களில் சிக்கல் சேர்வைக்காரரும் ஆறுமுகம் சேர்வையும் வீரர்களும் அங்கிருந்து குதிரைகளில் புறப்பட்டுச் சென்றனர். கன்னியாகுமரி நெடுஞ்சாலையில், உச்சி வேளை வெயிலைப் பொருட்படுத்தாமல் அவர்கள் செல்லும் குதிரைகளின் காலடி ஓசை நீண்டநேரம் தெளிவாக கேட்டது. 米米米