இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 85 "நாங்கள் மதுரையில் இருந்து வருகிறோம். மகாராஜாவிற்கு திருமுகம் கொண்டு வந்துள்ளோம்." என்று சொல்லிய சேவகர் ஒலைச் சுருள் ஒன்றைப் பிரதானியிடம் கையளித்தார். அதனைப் பெற்றுக்கொண்ட பிரதானி, மன்னருடன் விடுதிக்குள் சென்றார். அது என்ன ஒலை?.... மதுரை நாயக்க மன்னரது சேவகர்கள், மன்னரது மறுமொழிக்காக அங்கு காத்து நின்றனர். 米米米