இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மன்னர் மேலாட்ைகளைக் களைந்து கொடுத்தவுடன் குமாரத் தேவன் அவைகளை அடுத்த அறையில் வைத்து விட்டு, கையில் தண்ணிர் செம்புடன் வந்து மன்னரிடம் நீட்டினான். எதிர்புறம் இருந்த அறைக் குள் சென்ற மன்னர், கை, கால், முகம் கழுவி வந்தார். அப்பொழுது சாப்பாட்டு நாற்காலியில் இலையைப் பரப்பி அதில் சிற்றுண்டிகளை ஒவ்வொன்றாக வைத்துக் கொண்டிருந்தான் குமாரத்தேவன்.