பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 கல்வெட்டுக்கள்= - - பொதுவாக செம்பி நாட்டு மறவர்கள் சிறுதெய்வங்களை, கிராமக் காவல் தெய்வங்களை வணங்குவதே இல்லை எனச்சொல்லப்படுவது உண்டு. ஆனால் செம்பி நாட்டு, மறவர் பிரிவைச் சேர்ந்த சேதுபதிகள் குறிப்பாக கூத்தன் சேதுபதி, திருமலை ரகுநாத சேதுபதி, முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி ஆகியோர் கிராமக் காவல் தெய்வமான ஐயனார்க்கு ஏற்கனவே நிலக்கொடைகள் வழங்கியுள்ளனர். அந்த வரிசையில் இந்த நிலக்கொடையும் அமைந்துள்ளது. அண்மையில் இந்தக் கல்வெட்டினை ஆய்வு செய்வதற்காக பூலாங்குடி கிராமத்திற்கு சென்ற பொழுது மேலே சொன்ன கல்வெட்டு 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இடத்தில் இப்பொழுது காணப்படவில்லை. என்றாலும் பூலாங்குடிக்கு மேற்கே உள்ள சாத்தனூர் கிராமத்தைச் சார்ந்தவரும் அறந்தாங்கியில் கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்த திரு. சாத்தையா என்பவரிடம் மேலே சொன்ன கல்வெட்டு செய்தியினை உறுதி செய்யும் ஒலைமுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த ஒலைமுறியில் இக் கல்வெட்டில் விடுபட்டுப்போன பல பகுதிகளும் முழுமையாக காணப்படுகின்றது. மேலேகண்ட கல்வெட்டில ஒன்று முதல் நான்கு வரிகள் வரை கண்டுள்ள செய்திகளை தவிர கீழ்கண்ட செய்திகளும் அந்த ஒலைமுறியில் காணப்படுகிறது. ஒலுைமுறியில் வாதகமாவது 1806 ஆம் வருடம் சூலை மாதம் 24ஆம் தேதி அட்சய வருஷம் ஆடி மாதம் 1ஆம் தேதி பூரீமது மகாராசா ஹறிரணியப்ப கெர்ப்பயாஜி ரவிகுலமுத்து விசைய ரெகுநாத ராணி சேதுபதி மங்களேசுவரி நாச்சியாரவர்கள் சாலைக்கிராமம் தாலுக்கா வரவணி மாகாணம் சேகரம் பூலாங்குடிகிராமம் செக்கு பந்திக் கணக்கு எல்கையாவது.