பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 - சேதுபதி மன்னர் l இயல் 33 | இதம்பாடல் கிராமம் ஆண்ட அம்மன் கோயில் கல்வெட்டு தன்னரசுச் சீமையாக இருந்த சேதுபதிகளின் மறவர் சீமையை கி.பி.1803-ல் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியார் ஜமீன்தாரியாக அறிவித்ததுடன் முதலாவது ஜமீன்தாரராக ராணி மங்களேஸ்வரி நாச்சியாரை நியமனம் செய்திருந்ததை முன்னர் பார்த்தோம். இவர் கி.பி.1812ல் காலமானதால் அவரது சுவீகார புத்திரன் அண்ணாச்சாமி என்பவர் ஜமீன்தார் பொறுப்பை ஏற்றார். இவரை அடுத்து இராமநாதபுரம் ஜமீன்தாரராக நியமனம் பெற்ற முத்துவிஜயன் கி.பி.1830ல் காலமானதால் அவரது மனைவி முத்து விராயி நாச்சியாரின் சகோதரரும் வளர்ப்பு மகனுமான ராமசாமி சேதுபதி கி.பி.1840 வரை ஜமின்தாரராக இருந்து காலமானார். அவரது பெண் மக்களான மங்களேஸ்வரி நாச்சியார்