பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1Յ1 கல்வெட்டுக்கள் SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ஏராளமான கல்வெட்டுக்கள் நாடு முழுவதும் கோயில்களிலும், கண்மாய்க் கால்களிலும் பல பொது இடங்களிலும் சிதறிக்கிடக்கின்றன. இவை அனைத்தையும் ஒன்று திரட்டித் தொகுத்து வெளியிட்ட பிறகுதான் தமது நாட்டின் அரசியல், சமுதாய வாழ்வில் முன்னேற்றம் ஆகிய உண்மையான வரலாற்றினைத் தெரிந்து கொள்ள இயலும், தமிழகத்தைப் பொறுத்த வரையில் சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சி மட்டுமல்லாமல் பல்லவர்கள், மதுரை சுல்தான்கள், சம்புவரையர்கள். வேளிர்கள், சேதுபதி மன்னர்கள், தஞ்சை, திருச்சி, மதுரை, வேலூர் நாயக்கர்கள், மாவளி, வாணாதரையர்கள், அறந்தாங்கி புதுக்கோட்டை தொண்டைமான்கள், கொங்கு நாட்டுச்சோழ, பாண்டியர்கள், காரமங்கலம் கெட்டிமுதலிகள், ஆற்க்காட்டு நவாப்புகள் என்பன போன்ற பல்வேறு பெருமன்னர்களும் குறுநில மன்னர்களும் பாளையக்காரர்களும் வெட்டிவித்துள்ள கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் ஓலை முரிகளும் எனப் பல்வேறு ஆவணங்கள் இன்னும் தொகுக்கப்படாமல் உள்ளன. தாமரைப்பாக்கம், திருவீழிமழலை, பெருமுக்கல், சென்னை மாநகர் இவைகளில் சிலவற்றை தமிழ்நாடு அரசின் தொல்பொருள் துறையினர், தஞ்சை பெருஉடையார்க் கோவில் கல்வெட்டு, தர்மபுரி கல்வெட்டுக்கள் குமரி மாவட்டக் கல்வெட்டுக்கள். நன்னிலம் கல்வெட்டுக்கள், குடந்தைக் கல்வெட்டுக்கள், மயிலாடுதுறைக் கல்வெட்டுக்கள் என்ற சில தொகுதிகளையும் டாக்டர்.டி.என். சுப்ரமணியன் என்பவர் தென்னிந்திய கோயில் கல்வெட்டுக்கள் என மூன்று தொகுதிகளையும், புதுக்கோட்டை தர்பார், புதுக்கோட்டை கல்வெட்டுக்கள் தொகுதிகளையும் வெளியிட்டு தமிழ் வரலாற்றினுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இவைகளில் ஒன்று மட்டும் யூத மொழியில் (ஹீப்ரு மொழியில்) உள்ளது. மேலும் திருமலை தேவஸ்தானம், திருமலை திருப்பதி கல்வெட்டுக்கள் எனப் பத்துத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குறிப்பிட்டவாறு இந்தப் பதிப்புக்கள்