பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 கல்வெட்டுக்கள்= = வெளியிட்டு உள்ளேன். இதனைப் போன்றே சேதுபதி மன்னர்களது ஆட்சிக் காலத்தில் கி.பி. பதினாறு. பதினேழு, பதினெட்டு ஆம் நூற்றாண்டுகளில் மேலை நாடுகளிலிருந்து சேது நாட்டுக்கு வந்த போர்ச்சுக்கீசிய டச்சு, ஆங்கில, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியார்களுடனும், தஞ்சை மராத்திய மன்னர்களுடனும் ஆற்காட்டு நவாப்களுடனும், யாழ்ப்பாணம், கண்டி மன்னர்களுடனும் சேது மன்னர்கள் செய்து கொண்டவர்த்தக அரசியல் உடன்படிக்கைகள் ஒன்றுகூட இன்று நமக்குக் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரியதாகும். மேலும் இந்தக் கல்வெட்டுக்களில் கண்டுள்ள சில செய்திகளை இங்கே சற்று விரிவாகக் காணலாம். இந்தக் கல்வெட்டுக்கள் வரையப்பட்ட காலம் எது என்பதைக் கொண்டு அப்பொழுது சேதுநாடு எந்த அளவு பரந்து விரிந்திருந்தது என்பதை அறிவதற்கு இந்தக் கல்வெட்டுக்கள் துணைபுரிகின்றன. பொதுவாக சேதுநாடு என்பது உடையான் சேதுபதி, சின்ன உடையான் சேதுபதி ஆகியவர் காலத்தில் கி.பி.15ம் நூற்றாண்டின் தொடக்கத்தில இராமேஸ்வரம் தீவையும், அதற்கு மேற்கேயுள்ள இன்றைய இராமநாதபுரம், பரமக்குடி, இளையான்குடி, சிவகங்கை வட்டங்களை உடையதாக மட்டும் அமைந்திருந்தது. கி.பி.1645-ல் சேதுபதி மன்னரான திருமலை ரகுநாத சேதுபதி இந்த நாட்டின் வடபகுதிகளை கள்ளர் சீமை, அறந்தாங்கிச் சீமை, பட்டுக்கோட்டை சீமை, திருவாரூர் சீமை ஆகியவைகளைக் கொண்ட பரந்த பகுதியாக விரிவுபடுத்தினார். அடுத்துவந்த ரகுநாத கிழவன் சேதுபதி ஆட்சிக்காலத்தில் கள்ளர் சீமை பிரிந்து தன்னரசு நிலை பெற்றது. கி.பி.1725-ல் மரணமுற்ற முத்து விஜயரகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு சேது நாட்டின் வடபகுதி சின்ன மறவர் சீமை அல்லது சிவகங்கைச் சீமை என்ற தனி அரசாக நாலுகோட்டைப் பாளையக்காரர் பெரிய உடையத் தேவரது மகன் சசிவர்ணத் தேவர் காலத்தில் அடுத்த பிரிவினையைப் பெற்றது. கி.பி.1726 - 28 வரை இராமநாதபுரம் சேதுபதியாக இருந்த பவானி சங்கரத் தேவரை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற ஏற்பட்ட