பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 சேதுபதி மன்னர் போரின் முடிவில் அறந்தாங்கி, பட்டுக்கோட்டை திருவாரூர் சீமைகள் மீண்டும் தஞ்சை மன்னருக்குத் தானம் வார்க்கப்பட்டன. இந்த நிகழ்வுகளிலிருந்து சேதுபதி மன்னர்களது ஆட்சிப் பரப்பு இன்றைய இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகக் கொண்டிருந்தன என்பது புலனாகிறது. இந்தப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக கி.பி.13-வது நூற்றாண்டு வரை நீடித்த பிற்காலப் பாண்டியப் பேரரசுகளின் நிலக் கூறுகளே தொடர்ந்து இந்தப் பகுதிகளில் சேதுபதி மன்னர்களாலும் பேணப்பட்டு வந்தன என்பது சிறப்பான செய்தியாகும். பிற்காலப் பாண்டியர்களது காலத்தில் நிலப்பரப்பு வளநாடு, கூற்றம், நாடு, ஊர் என்ற வகைகளில் பிரிக்கப்பட்டு அவைகளுக்கான பெயர்களும் சூட்டப்பட்டிருந்தன. அந்த முறையில் இந்த நூலில் கண்ட கல்வெட்டுக்களில் செவ்விருக்கை நாடு (இராமநாதபுரம், பரமக்குடி வட்டம்) ராஜ ராஜ வளநாடு, (பரமக்குடி வட்டம்) கேரள சிங்க வளநாடு,(காரைக்குடி திருப்புத்துார் வட்டங்கள்) கல்வாசல் நாடு (திருப்புத்துர் வட்டம் வட பகுதி) கானாடு உத்தாரம் நாடு (திருமெய்யம் வட்டம்) முத்துார் நாடு (தேவகோட்டை வட்டம்) ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த வளநாடுகளும் நாடுகளும் அமைந்திருந்துதான் கூற்றங்கள், மிழலைக் கூற்றம் முத்துர் கூற்றம், துகவுர் கூற்றம், பாகனுர்க்கூற்றம், ஆகிய கூற்றங்களின் பெயர்கள் இந்தக் கல்வெட்டுககளில் இடம் பெறாதது வியப்பாக இருக்கின்றன. இந்த மன்னர்கள் வழங்கிய செப்பேடுகளில் இந்தக் கூற்றங்களையும், வேறு சில வளநாடுகளையும், தவறாமல் குறிப்பிட்டுள்ளனர் என்பது இங்கு நோக்கற்பாலனது இந்த நிலப்பரப்புக்களில் கண்ட நிலங்கள் பலவகையாகப் பாகுபடுத்தப்பட்டிருந்ததையும், இந்தக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகிறது. அவையாவன, காடுகள், அனாதி, தருசுகள் பொட்டல் வயல் (ஒரு குறிப்பிட்ட நிலத்தை சுட்டிக் காட்டுவதற்கு தாக்கு