பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O4 சேதுபதி மன்னர் காவேரிக்கால். ரகுநாத காவேரிக் கால், அழகுப் பிள்ளை கால். குளமாணிக்கம், ஓடைக்கால் ஆகியனவும் அமைந்து இருந்தது தெரியவருகிறது. முத்துவிஜயரகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில இராமநாதபுரம் கோட்டைக்கு வடமேற்கே இப்பொழுது பெரிய கண்மாய் என வழங்கப்படும், ரகுநாத சமுத்திரத்தையும் கமுதிக் கோட்டைக்கு தெற்கே செல்லும் குண்டாற்றிலிருந்து ரகுநாதக் காவேரி என்ற சுமார் 30 கல் நீளமுள்ள வாய்க்காலினையும் வெட்டுவித்ததாக அவரது செப்பேடுகளிலிருந்து தெரியவருகிறது. இந்த மன்னரது ஆட்சிக் காலத்தில் பெரிய நீர்த்தேக்கங்களான கண்மாய்கள் சமுத்திரம் என்ற சிறப்புப் பெயர்களில் வழங்கப்பட்டதையும் அறிய முடிகிறது. எடுத்துக்காட்டாக ரெகுநாத சமுத்திரம நாகநாத சமுத்திரம், முதலியன. சமுத்திரம் என்ற இந்த சொல் தெலுங்கினர் ஆட்சியால் தமிழகத்தில் ஏற்பட்டதாகும். மக்கள் பிரிவினரது மங்கல காரியங்களையும், சமுதாய திருநாட்களையும் ஆலய விழாக்களையும் நடத்துவதற்கு சிறப்பான நாட்களை குறிப்பதற்கு உதவிய நுண்களைகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மானியங்களையும், சர்வமான்ய காணிகளையும் வழங்கி ஆதரித்தனர் என்பதை விரையாச்சிலை கல்வெட்டு தெரிவிக்கின்றது. மேலும் பருவ காலங்களில் விளை நிலங்களில் பொன்னேர் இட்டு முதல் ஏரைத்துவக்கி வைப்பதற்கான நாள், வயல்களில் விதைகளை முதலில் விதைப்பதற்கான நாள், அறுவடையை தொடக்குவதற்கான நல்ல நாள், கிராமக் கோயில்களிலும், சிறு தெய்வ, காவல் தெய்வ வழிபாட்டிற்கான சிறப்பு நாள்கள் ஆகியவற்றைக் குறித்துக் கொடுப்பதுடன் கண்மாயிலிருந்து, நல்ல நாளில் முதன்முறையாக வாய்க்காலுக்கு நீரைத் திறந்துவிடுவது ஆகிய நிகழ்ச்சிகளுக்குத் திருநாளை கணித்துக குறித்துக் கொடுப்பது பஞ்சாங்கம், ஜோதிடம் ஆகியவைகளுக்கான மான்யங்களைப் பெற்றுள்ள அலுவலரது கடமையாகும். மற்றும் நாட்டுப் பணிக்காக போரிட்டு உயிர்த் துறந்தவர்களின் குடும்பத்தினருக்கு சீவிதம் என்ற உதிரப்பட்டிநிலங்களும், திருக்கோயில்களில் ஆகமங்களின் வழிநின்று கோயில் பணிகளைச் செய்து சிவப்பிராமணர்களது குடியிருப்புக்காக அகரம் என்ற பெயரில்