பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள்= - - - குறிப்பிட்டோம். இதனைப்போன்றே இந்தக் கண்மாய்க் கரையின் ஆதாரங்களான மடைகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் நாளடைவில் குடியிருப்புக்களும் எழுந்து அந்த மடைகளின் பெயராலேயே அந்த ஊர்களும் வழங்கப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக பத்தாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராஜ சிம்ம பாண்டியனால் அமைக்கப்பட்ட பெரும் நீர்த்தேக்கம் இன்றைய திருவாடானை வட்டத்தில் ராஜ சிங்க மங்கலம் என்ற நகருக்கு அருகே அமைந்துள்ளது. முன்னர் சுமார் பத்துக்கல் நீள தொலைவுள்ள இந்தக் கண்மாயின் கிழக்குக் கரையில் 48 மடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்பொழுது 20 மடைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. அந்த மடைகளில் மூன்று மடைகள் அருகே சிறு கிராமங்களும் எழுந்து அந்த மடைகளின் பெயராலேயே இன்றும், இராமநாதமடை, பெருமாள்த்தேவர் மடை, ரகுநாத மடை என்ற ஊர்கள் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனைப்போன்றே இராமநாதபுரம் கோட்டைக்கு தெற்கே சக்கரக்கோட்டை கண்மாயின் தென்பகுதியில் கி.பி.1680ல் இராஜசூர்ய சேதுபதியின் நினைவாக அமைக்கப்பட்ட கலுங்கும் அதையொட்டிய கிராமமும் இராஜசூர்ய மடை என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. இன்னும் இதனைப் போன்று மடைகள் வேறு சில பெயராலும் அழைக்கப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக மேலமடை, செவிட்டு மடை, ஊமைமடை என்பன போன்றனவாகும். இத்தகைய நீர் ஆதாரங்களைப் பழையனவற்றைப் பேணியும் புதியவைகளைத் தோற்றுவித்தும் சேது மன்னர்கள் ஆட்சி குடிகளுக்குப் பயனுள்ளதாக அமைந்ததை அவர்களது செப்பேடுகள் பல தெரிவிக்கின்றன. இந்தச் செப்பேடுகளிலிருந்து சேதுபதிச் சீமையில் ஊடறுத்துக் கிழக்கு நோக்கிச் செல்லும் வைகை ஆற்றின் வடபகுதியில் நாட்டார்கால், சேதுகால், தேத்தன்கால், ஆடடான்கால், வளமாவூர்க்கால், ஆய்க்குடிகால், காவனுர்க் கால், கொடிக்குளம், வடகால், தேனாற்றுக் கால் ஆகியன பயன்பாட்டில் இருந்து வந்ததையும், வைகை ஆற்றின் தென்பகுதியில் கூத்தன் கால், பனையன்கால், களரிக் கால், நாராயண