பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B4 – = =சேதுபதி மன்னர் வரையப்பட்டுள்ள 20.84 ஊர்களின் பெயர் பட்டியலில் காணப்படவில்லை. விநாயப் பெருமாளுக்கு கற்பூர விநாயகர் அடைக்கலம் காத்த விநாயகர் என்பன போன்ற பல சிறப்புப் பெயர்கள் இருந்து வந்த பொழுதினும் நினைத்ததை முடித்த விநாயகர் என்ற சொல் பிரயோகம் இந்தக் கல்வெட்டில மட்டும் காணப்படுகிறது. திருமலை சேதுபதி ரகுநாத மன்னருக்கு நினைத்ததை முடித்தான் என்ற வழக்கு இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்களில் காணப்படுவதால் இந்த ஊரும அந்த மன்னர் பெயராலேயே நினைத்ததை முடித்த ரகுநாயகன் பட்டிணம் என்ற வழக்கு இருந்திருத்தல் வேண்டும். இந்தக் கல்வெட்டினை 1907-ல் படியெடுக்கப்பட்ட பொழுது நினைத்ததை முடித்த ரகுடநாயகர் என்பதற்குப் பதிலாக நினைத்ததை முடித்த விநாயகர் பட்டினம் என்ற தவறு ஏற்பட்டு இருத்தல் பொருத்தமாக உள்ளது. தஞ்சாவூர், சரசுவதி மகால் நூலகம் வெளியிடப்பட்டுள்ள வண்ணத் திரட்டு என்ற நூலில் திருமலை சேதுபதி மன்னரைப் பற்றிய அடைமொழியாக ஒரு வண்ணத்தில் இராமநாயகர், ரகுநாயகர் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது இங்கு ஆராயத்தக்கது. இந்த கல்வெட்டில் 1-4ம் 17, 18, 20, 21, 39, 40 ஆகியவரிகள் பழுதடைந்து இருப்பதால் கல்வெட்டு முழுமையாக படிப்பதற்கு இயலவில்லை. இந்தக் கல்வெட்டின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது." வரி "1 - 4................................................... திருமலை சேதுப . தி மகாராசர் அவ ர்கள் அனுத்தோ

  • கை மங்கலமா