பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சேதுபதி மன்னர் l 2: 17 | கண்ணங்காரக்குடி சாஸ்தா கோயில் கல்வெட்டு இந்தக் கல்வெட்டும் புதுக்கோட்டை தர்பார் கல்வெட்டு தொகுதியில் காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டினை வெட்டுவித்தவர் மன்னர் திருமலை ரெகுநாத சேதுபதி ஆவார். இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி.1669. இந்தக் கல்வெட்டு கண்ணங்காரக்குடியில் உள்ள சாஸ்தா என்று அழைக்கப்படும் காவல் தெய்வத்திற்கு அந்த ஊரில் அமைந்துள்ள நஞ்சை புஞ்சை நிலங்களைத் தானமாக வழங்கியதைத் தெரிவிக்கின்றது. சாஸ்தா என்பது சாத்தன் என்ற தமிழ்சொல்லின் வடமொழியாகும். கல்வெட்டு சிதைந்து விட்டதால் தானம் வழங்கப்பட்ட நஞ்சை புஞ்சை நிலங்களும், அவைகளுக்கான பெரும் நான்கு எல்லைகளும் அறியத்தக்கதாக இல்லை. இந்த சேதுபதி மன்னரது