பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறக்கொடைகளைப் பற்றிய செய்திகளை அறியும்பொழுது இந்த மன்னர் தமது அறக்கொடைக்கு உரிய கோவில் அல்லது தெய்வம் சிறப்பானது அல்லது சிறியது என்ற மனப்பான்மை இல்லாமல் எல்லாத் தெய்வங்களுக்கும் ஒரே மாதிரியாக அறக்கொடை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. செம்பி நாட்டு மறவர் பிரிவைச் சேர்ந்த சேதுபதி மன்னர்கள் மிகவும் வைதீகமான முறையில் பெரிய தெய்வங்களைத் தான் வணங்கி வழிபட்டு வந்தனர் என்ற சில நூலாசிரியர்களது கருத்து பொருத்தமானது இல்லை என்பதை இந்த மன்னரது இத்தகைய கொடைகள் புலப்படுத்துகின்றன. மேற்படி கண்ணங்காரக்குடி, சாஸ்தா கோவில் எதிரில் நடப்பட்டிருக்கும் ஓர் கல்லிலுள்ள சாஸநம். கல்வெட்டு வாசகம்* 1. "சகாத்தம் 2. 1591 3. இதன்மேல்செ 4. ல்லாநின் 5. ற ராஷ்சத வடி வை 6. காசிமீ 5உ ரீ 7. மது திருமலை 8. சேதுபதி கா - 9. த்த தேவரவ -