பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 கல்வெட்டுக்கள் = l இயல் 18 | திருமெய்யம் கல்வெட்டு இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தின் மூன்று வட்டங்களில் ஒன்றாக திருமெய்யம் என்ற ஊர் அமைந்துள்ளது. காரைக்குடி திருச்சி நெடுஞ்சாலையின் வடக்கே 20வது கீ.மீ. அமைந்துள்ள இந்த ஊரின் மத்தியில் அமைந்துள்ள சுமார் 120 அடி உய குன்றினைக் கொண்டதாக உள்ளது. இந்தக் குன்றின் தென் பகுதியில் அமைந்துள்ளதுதான் லெட்சுமி நாராயணர் ஆலயம் ஆகும். இந்தக் கோயில் கி.பி.8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் அமைக்கப்பட்ட குடவரைக் கோயில் ஆகும். ஏறத்தாழ தொண்டை மண்டலத்திலுள்ள மாமல்லபுரத்தில் உள்ள குடவரைக் கோயிலை ஒத்ததாக காணப்படுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள பெருமாள் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். திருமங்கை ஆழ்வார் போன்ற வைணவப் பெரியார்கள் இந்தக் கோயிலுக்கு வந்து மங்கலாசானம் என்ற பதிகங்களைப் பாடியிருப்பதால் இந்தத் தலம் வைணவர்களது 108 திருப்பதிகளில் ஒன்றாக