பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடைக்கன் சேதுபதி (கி.பி.1605-22) பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மறவர் சீமையின் மன்னராக இருந்தவர் சடைக்கன் சேதுபதி என்பவர். அவர் சடைக்கன் உடையான் என்றும் திருமலைஉடையான் சேதுபதி என்றும் வரலாற்று ஆவணங்களில் குறிக்கப்படுகிறார். இவருக்கு செயதுங்கள் என்ற ஒரு பெயரும் இருந்ததை பழஞ் சுவடியொன்று" தெரிவிக்கிறது. -- பொதுவாக, சிவாலயங்களில் கோயில் கொண்டுள்ள மூர்த்தியைக் குறிப்பிடும் சொல் உடையார் . இராமேசுவரத்து இராமநாத சுவாமிக்கு ஆட்பட்டவர் என்ற பொருளில் இந்த மன்னர், உடையார் என்ற பெயரைப் புனைந்து இருந்தார். இராமனாகிய திருமாலுக்கு நாதரான சிவன்' என்ற பொருளில் சைவ வைணவ சமய நெறிகளின் ஒற்றுமைப் பெயராக 'இராமநாதசுவாமி இராமேசுவரன்' என்ற பெயர்கள் 1. Pedigiree field by Sivakami Nachiar in O. s. 3 of 1813 of the Pronimicial Court, Madras. 2. Taylor C. J.-Old Historical Manuscripts-Vol II (1835) p 22.