பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 87 மில்லாமல், பத்திரமாய் பார்த்து குருக்கள் இராமேசுவரத்துக்குப் போய் மதுரை வருகிறவரைக்கும் கூடவே வந்தார் ... ... ... * * * இதனால் பெரிதும் மகிழ்ச்சியடைந்த மதுரை மன்னர், சடைக்கன் சேதுபதியைப் பாராட்டி, தமது எழுபத்து இரண்டு பாளையக் காரர்களுக்கும் தலைமையான 'தளவாயாக’ நியமனம் செய் தார்.4 கிழக்கு கடற்கரைப் பகுதியில் பரங்கியரது ஆதிக்கத்தைச் சமாளிப்பதற்கான, புத்திசாலித்தனமாக, மதுரை நாயக்கர் மேற் கொண்ட நடவடிக்கை இது என்பது கால்டுவெல் பாதிரியரது கருத்து" சேதுபதி மன்னரும் மதுரை நாயக்க மன்னருக்கு அதிகாரத் துக்கு அல்லாமல் அன்பிற்கு கட்டுப்பட்டு அரசியல் உறுதுணை யாக உதவிவந்தார். வடக்கு வட்டகையான காளையார் கோயில், பட்டமங்கலம் பகுதியில் பயங்கரமான குழப்பங்களைத் தோற்று வித்த குறும்பர்களையும், தெற்கே சிவகிரி வன்னியனையும், அடக்கி அமைதி நிலைக்கச் செய்தார். மறவர்சீமையில் அவரது ஆட்சிப் பதினேழு ஆண்டுகள் நடைபெற்றன. இந்த மன்னரது தலைமையிடம் (சில காலம் போகலூரிலும்) பெரும்பாலும் இராமேசுவரத்திலும் இருந்ததாக தெரிகிறது. இராமேசுவரம் கந்தமான ஆலயத்திற்கு அண்மையில் உள்ள இடிபாடுகள் இந்த மன்னரது வரலாற்றிற்கு தொடர்புடையவை. மற்றும் இராமநாதபுரம் நகருக்கு மேற்கே பத்து கல்தொலைவில் உள்ள போகலூர் இந்த மன்னரது கோநகராக விளங்கிய அதற்கான தடயங்கள் எதுவும் இப்பொழுது இல்லை, இங்கு புகலிடம் பெற்ற மக்களது ஊர் என்ற பொருளிலோ (புகலூர்) அல்லது இங்குள்ள ஆலயத்தில் அமர்ந்துள்ள 'பெரும்புகழ் கூத்த நாயனார்' நினைவாகப் புகழுர்' என்று இந்த ஊரின் பெயர் அமைதல் வேண்டும். 3 Taylor C.F. old Historical Manuscripts (1835) Vol II p.27-29 4. Sathianathier - History of Madura Nayaks (1924) pp. 92–93 5. Caldwell – Fr. General and Physical History of Tinneveli р, 71