பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 119 - மன்னர் வளைகுடா பகுதியில் கடலாதிக்கம் கொண்டு இருந்த போர்த்துகீசியரும் டச்சுக்காரரும், சேதுபதிமன்னரது முத்துச் சலாப உரிமையை மதித்து நடந்ததுடன், அந்த உரிமையை இணக்கமான முறையில் பெறுவதற்கும் அவர்கள் முயற்சித்து வந்தனர். இத்தகைய முயற்சி ஒன்றை மேற்கொண்ட டச்சுக்காரர் சிறந்த அன்பளிப்பு பொருள்களுடன் சென்று சேதுமன்னரைப் பேட்டிகண்ட நிகழ்ச்சியை, இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வண்ண ஒவியமாக இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனையில் தீட்டப்பெற்று இருப்பதை இன்றும் கண்குளிரக் காணலாம். முத்துக் குளிக்கும் உரிமை, இராமநாத புரம் சேதுபதிகளில் தன்னரசு மன்னராக விளங்கிய முத்துராம லிங்க விஜயரகுநாத சேதுபதி, கி. பி. 1795ல் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டது வரை நீடித்தது. சேதுபதிகளுக்கு முன்னர் தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் திருக்கோயில்களுக்கு, பொன்னையும் பூமியையும் தானமாக வழங்கியதை அவர்களது கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் சொல்லுகின்றன. ராஜராஜ சோழன் முத்துக்களையும் முத்தால் புனைந்த ஆபரணங்களையும் தஞ்சைப் பெருவுடையார் ஆலயத் திற்கு மிகுதியாக வழங்கினான் முன்னிர் பழனத்தின் பன்னி ராயிரம் தீவுகளைக் கொண்ட வங்கக் கடல் முழுவதையும் அவன் தனது ஆணைச்சக்கரத்திற்குள் வளைத்து வைத்திருந்தும் கூட, முத்துக் குளிக்கும் உரிமையை தெய்வீகப்பணிக்கு வழங்கும் உள்ளம் அவனுக்கு ஏற்பட இல்லை. ஆனால் அளவில் சிறி தான சீமைக்கும் வடிவில் குறைந்த கடல்பகுதிக்கும் ஆட்சி யாளராக இருந்தும், சேதுமன்னர்கள் பொன்னையும் பூமியை யும் அள்ளி அள்ளி வழங்கியதுடன் அவர்களுக்கு உரித்தான மன்னார் சலாப உரிமையையும், இராமேசுவரம், திருப்பெருந் துறை, திருப்புல்லாணி திருக்கோயில்களுக்கு வழங்கி, வரலாற் றில் ஒப்புவமை இல்லாத உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளனர். 8. Nagasami Dr - Ramanathapuram Archaelogical Guide (1978) р. 57 9. நாகசாமி - Dr. R. தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டுக்கள் (1969) பக்கங்கள் 13-44.