பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 8 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் தளவாய் சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : இராமநாதசுவாமி திருக்கோயில் இராமேசுவரம் 8. செப்பேட்டின் காலம் : சகம் 1553 பிரசோற்பத்தி ஆண்டு தை 25 (கி. பி. 3-2-1631) 4. செப்பேட்டின் பொருள் : மேற்படி கோயிலுக்கு மருதங்க நல்லூர் தானம். இந்தச் செப்பேட்டில் தளவாய் சேதுபதி மன்னரது விருதா வளியாக ஐம்பத்துயொரு சிறப்புப் பெயர்கள் கொடுக்கப் பட்டுள்ளன. இவையனைத்தும் இவரது தந்தையார் உடையான் டைக்கன் சேதுபதியின் செப்பேடுகளில் காணப்பட்டவை. இந்தச் செப்பேட்டின் காலமாக சகம் 1538 பிரசோற்பதி ஆண்டு எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரசோற்பதி ஆண்டு 1553ல் தான் வருகிறது. ஆதலால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள சகம் வருடம் தவறாக உள்ளது. இதனது சரியான காலமாக சகம் 1553 (கி.பி. 1631) ஐக் கொள்ளலாம் இதனை வழங்கிய வர் பெயர் தளவாய் சேதுபதி என பொதுவான பெயரில் இருந்தா லும் இந்தச் செப்பேட்டின் காலத்தைக் கொண்டு இதனை வழங்கியவர் தளவாய் கூத்தன் சேதுபதி எனக்கொள்ளலாம். இராமேசுவரம் இராமநாதசுவாமிக்கு பட்ட காணிக்கை யாக சேது மன்னர் மருதங்கநல்லூர் என்ற கிராமத்தை தான மாக வழங்கிய செய்தி இந்தச் செப்பேட்டில் உள்ளது. இராமேசு