பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 எஸ். எம் கமால் விளைநிலம், என்ற பொருளில் வழக்கில் வழங்கப்பட்டாலும், இந்தப்பட்டயத்தில் அந்தச் சொல் இடவாகு பெயராக பேரிடத் தைக் கொண்ட ஊரைக்குறிப்பிட பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பட்டவர்காணி, பலிக்காணி, தீப்பாஞ்சிகாணி என்றாற் போல, இந்த பட்டக்காணி என்ற சொல் வழக்கு இருந்தா லும் பட்டம் - முதன்மை, அல்லது பொருத்தம் என்ற பொருளில் பட்டம் காணிக்கை வந்துள்ளது. சேதுபதி மன்னர் பட்டத்திற்கு வந்தவுடன் வழங்கப்படும் முதல் தானம் என்பது இதன் பொருள். ஆடிப்பட்டம், பட்டத்து ராணி - என்ற சொற்றொடர்களை நோக்குக. பரமக்குடி வட்டத்தில் உள்ள சேது கால் என்ற பெயரி லான ஊர்தான் இந்த பட்டயத்தில் காணப்படும் ஊர் இதைப் போன்று இதே வட்டாரத்தில் திருமலை தேவன் கால் என்ற ஊர் தேத்தாங்கால்' என்று வழங்கி வருகிறது. சேது காவலன் காலப்போக்கில் வழக்கொழிந்து இடைக்குறையாக சேது கால் என்ற பேச்சில்லா கிராமமாக ஆகி இருக்க வேண்டும். இவ்விதம் இயற்கை உற்பாதங்களான வறட்சி, பஞ்சம், வெள்ளம், மற்றும் போர், போன்ற காரணங்களினால் மக்களது குடியிருப்புகள், அழிந்து மக்கள் வேறிடம் புகுந்த காரணங்களினால் அந்த ஊர்கள் அழிந்து வருவதுண்டு, ஆனால் அந்த ஊரைச் சார்ந்த விளை நிலங்கள் மட்டும் ஒரு கால கட்டம் வரை உலக வழக் கிலும், அந்த ஊரின் பெயரில் வழங்கி வருவதுண்டு. அப் பொழுது அந்த ஊர் பேச்சில்லா கிராமம்' எனப்படும். பேச்சு இல்லா என்பது மக்களது குடி இருப்பும் நடமாட்டமும் இல்லா தது என்ற பொருளில். இத்தகைய பல பேச்சில்லா கிராமங் கள்' இந்த வட்டாரத்தில் உண்டு. மேலும் பட்டயத்தில் இந்த ஊரின் நான்கெல்கை குறிப்பிடாதது, இந்த ஊரை நிர்ணயம் செய்வதற்கு உதவாதநிலை. நான்கெல்லைக்குட்பட்ட என்ற தொடர் பொறிக்கப்பட்டிருப்பதில் இருந்து, இந்த கிராமத்திற் கான வரையறுக்கப்பட்ட எல்லைகள் இருந்து சூலக்கல்' நாட்டப்பட்டு இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. 1 Alphabatical Ist of Ramnad Dist - Government Puplication (1931) page 16.