பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 எஸ். எம் கமால் இவர் காளையார் கோவிலில் குடியமர்ந்தவராக இருக்க வேண்டுமென்பது ஊகிக்கப்படுகிறது. தேவார காலத்தில் சிறப் புற்று கானை என வழங்கப்பட்ட இந்தத் தலம் பதினான் காம் நூற்றாண்டு முதல் சீரழிவைச் சந்தித்தது. ஆகையால் இந்தத் தலத்தில் அகோபலைய்யன் போன்றவர்கள் இருந்து வருவது ஆன்மிக எழுச்சிக்கு உதவும் என மன்னர் நினைத் திருக்கக் கூடும். ஆதலால் இந்த மன்னர் தனியார்களுக்கு அது வரை அறக்கொடை எதுவும் வழங்காத நிலையில் இந்த வித்த கருக்கு முதன் முதலாக இத்தகையக் கொடையினை வழங்கி யுள்ளார். அவர் கல்வி கேள்விகளிலும் வேத வியாகரணங்களி லும் விற்பன்னராக விளங்கிய காரணத்தினால் இவரைச் சிறப் பிக்கும் வகையில் காளையார்கோவில் சீமைப் பகுதியில் ஏழு கிராமங்களை ஒரே தொகுதியாக வழங்கி இருப்பது குறிப்பிடத் தக்கதாகும். பனிவயல், சூரனேம்பல், கீழச்சூரனேம்பல், மாவூரணி, திருப்பநதி, மல்லன் ஊரணி, பெரியனேந்தல் என்பன அவை இந்தப்பகுதியும் இதற்கு வடக்கே உள்ள பட்டமங்கலம் பகுதி யும் இந்த மன்னரது முன்னவர் திருமலை சடைக்கன் உடை யான் சேதுபதி ஆட்சிமுதல் தொடர்ந்து மறவர் சீமையாக இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்தமன்னருக்கு முன்னர் இந்தப் பகுதி கூத்தன் சேதுபதி மகன் தம்பியின் ஆளுகையிலும் சில காலம் இருந்ததை இராமநாதபுரம் மேன் யுவல் தெரிவிக்கின்றது. . இந்த அறக்கொடையில் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு நான்கு எல்கைகள் செப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ளபோதும் இவைகளிலிருந்து அரசுக்கு பெறப்பட்ட வருவாய்கள் எவை என்பதை குறிக்கப்படாமல் சகல சமுதாய பிராப்திகள் என்று மட்டும் வரையப்பட்டுள்ளது. இதிலிருந்து அந்தக் கிராமங்களி லிருந்து வரிப்பாடுகள் எதுவும் சேதுபதி மன்னருக்கு வரப் பெற வில்லை என்பது ஊகிக்கப்படுகிறது. கி.பி. 1659 வரை திருமலை சேதுபதி மன்னர் மதுரை நாயக்கரது மேலாதிக்கத்தை ஏற்றவராக இருந்த காரணத் தினால் மதுரை நிர்வாகத்தைப் பின்பற்றி சேது நாடு நிர்வாகத் திலும் இராயசம் என்ற செயலர் பதவி இருந்ததை இந்தச் செப்பேட்டின் வரி 50ல் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. 1. Rajaram Row–T – Manual of Ramnad Samasthanam (1891)p -