பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 எஸ் எம். கமால் - - - _ குதிரையொன்றைக் கொண்டு இருந்ததாகவும் இராமேசுவரம் தீவுப்போரில், மதுரை மன்னரது படைகளையும், மதுரை தளபதி இராமப்பையனையும்; " நாடு கலக்கி என்னும் நல்ல தொரு வான்பரியைக் கொண்டு வரச்செய்து கலக்கமுறச் செய்தார் என இராமப் பையன் அம்மானை பாடுகிறது. இத் தகைய தொரு நல்லவான் பரியொன்றை வைத்து நாடுகளைக் கலக்கி வந்ததால், சேதுபதி மன்னருக்கு நாடுகலக்கிய வாகன புருஷன்' என்ற விருது ஏற்பட்டு இருக்க வேண்டும். மேலும், இந்த மன்னர், பரதநாட்டியக் கலையில் பெரு விருப்புக் கொண்டு இருந்தார். பக்திபூர்வமான பாவனைகளைப் பாடல்களுடன் அபிநயத்துக் காட்டும் பொழுது, பார்ப்பவர் உள் ளத்தில் பரவசம் ஏற்படச் செய்வதுடன், அந்தப் நடிப்பிலும் பாடலிலும் நம்மை முழுமையாக ஈடுபடச் செய்யும் ஆற்றல் மிக்க அரிய கலை பரதநாட்டியம். இந்த மன்னர் திருச்சுழியல் திருக்கோயில் விழாவில் வேடம் புனைந்து மிகச்சிறப்பாக பரத நாட்டியம் ஆடிய தாசி கலியாணிக்கு பாறைக்குளம் என்ற கிராமத்தை தானமாக வழங்கிய செய்தியும் உள்ளது. ஆதலால் இந்த மன்னருக்கு 'பரதநாடகப் பக்திப்பிரியன்' என்ற புதிய விருதும் இருந்ததை இந்தச் செப்பேட்டில் காண முடிகிறது. இராமனாதபுரம் அரண்மனைக்குள் உள்ள கோயிலில் எழுந்தருளியுள்ள பூரீ ராஜராஜேஸ்வரி அம்மன் நவராத்திரி விழாவிற்கு இராமேசுவரம் சதாசிவ பட்டர் புத்திரன் சங்கர குருக்களை நியமனம் செய்தது சம்பந்தமான ஆணையைக் கொண்டது இந்தச் செப்பேடு. மைசூர் படைகளால் கி பி.1658ல் பேரபாயம் ஏற்பட்டு கோநகர் மதுரையும் மைசூர் படைகளிடம் சிக்கும் நிலை ஏற்பட்டது. மதுரை மன்னர் திருமலை நாயக்கர் வேண்டுகோளின்படி சேதுபதி மன்னர் தமது மறப்படையுடன் மதுரைச் சீமைக்கு விரைந்து சென்று, மைசூர்படைகளுடன் பொருதி அழித்ததன் நினைவாக திருமலைநாயக்கர், இந்த 2. இராமப்பையன் அம்மானை (1950) தஞ்சை சரசுவதி மகால் பதிப்பு - பக்கம் 54. 3. இராம. சமஸ்தான நிலமானிய வேலைக்கணக்கு - குறிப்பு