பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 எஸ். எம். கமால் அந்த விழாவின் சில முக்கிய நிகழ்ச்சிகள். 1. வாபன சடங்கு அல்லது மன்னர் சடங்குகளுக்கு தம்மை ஆயத்தம் செய்து கொள்ளுதல். 2. மங்கல நீராட்டு 3. சேது பீடத்திற்கு பூஜை கலசஸ்தாபனம் ராஜராஜேஸ்வரி திருமேனியும் மரகத பீட மும் விழாப் பந்தலுக்கு பவனியாக எடுத்து வருதல். காப்புக்கட்டு சடங்கு சேதுபதி மன்னர் வழிபாடு. பிற்பகலில் பீரங்கி முழக்கம், பேரிகை அறைதல், தேவ தாசிகள், நாதசுவரவித்வான்கள் அணிவகுத்து வருதல், இசை, நாட்டியக்காரர். சிப்பாய்கள், அலுவலர்கள், விருந் தாளிகள், மன்னர் வருகை, வரவேற்பு, அவை மண்டபத் தில் மன்னர் கொலுவீற்று இருத்தல். 7. சாயங்கால பூசை, இரவு பூசைகளில் மன்னர் கலந்து கொள்ளுதல், துாப, தீப, நைவேத்தியம், தாம்பூலம், கர்ப் பூர ஆரத்தி. 8. இரவில், மன்னர் கொலுவீற்று இருத்தல், கலைஞர்கள், புலவர்கள் கலைப்படைப்புகளை அரங்கேற்றுதல், மன்னர் பரிசுகளும் பாராட்டும் வழங்கல். இத்தகு நிகழ்ச்சிகள் ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடை பெற்ற பிறகு பத்தாவது நாள் அன்று பிற்பகலில் சேதுபதி மன்னர் அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையில் பவனிசென்று கோட்டைக்கு வெளியே ஒருகல் தொலைவில் உள்ள மகர் நோன்பு பொட்டலில், ஏனைய திருக்கோயில்களில் இருந்து அங்கு எழுந்தருளிய தெய்வத் திருமேனிகளை தரிசித்து விட்டு அம்பிகை ராஜராஜேஸ்வரியின் தொண்டனாக அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தி அல்லவைகள் ஓடி ஒளியும்படி செய்து வாணவேடிக்கைகளைக் கண்டு களித்து அரண்மனைக் குத் திரும்புவது வழக்கம். இரவு பத்தாவது நாள் கொலு தசரா திருவிழாவில் இறுதி நிகழ்ச்சியாக நடைபெறும். தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் இத்தகைய இராம