பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து: தி மன்னர் செப்பேடுகள் 3 இறைப்பணியையும், தமிழ்த் தொண்டையும், தாளாத கொடைத் திறனையும் கட்டியங்கூறும் காலப் பெட்டகங்களாக அவை இன்னும் விளங்கி வருகின்றன. சேதுபதிகளின் தோற்றம் : ஆனால், இந்த மன்னர் பரம்பரையின் தொன்மையைத் துலக்கும் தெளிவான செய்திகள் வரலாற்றில் இல்லை. பாலை யும் நெய்தலுமாக பரந்து விரிந்துள்ள கிழக்கு இராமநாதபுரம் பகுதியில் வளர்ந்து வாழ்ந்த இந்தப் பழங்குடியினர், வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்’ என்பது ஒருசில ஆய்வாளர் முடிவு. இதன் காரணமாக, இந்த நாட்டின் இருபெரும் எல்லைகளாகிய இமயத்தையும் சேதுவையும் இடைப்படுத்தி வழங்கும் இராமகாதையின் இறுதிக்களமாகிய சேதுவை, நேரில் தரிசிப்பதற்கு பலநூற்றாண்டு காலமாக ஆண்டு முழுவதும் த ல யாத்திரை வருகின்ற அனைத்து இந்திய மக்களை, ஆறலைக் கள்வர் பயம் நீக்கி, வேண்டும் வசதி வழங்குவதற்கு இந்தப் பகுதியில் நிலையான பலம்மிக்க அரசு பல நூற்றாண்டுகளாக இருந்திருக்க வேண்டும், என்பதும் அந்த அரசவழியினர்தான் இந்த சேதுவேந்தர்கள் என்பதும் வரலாற்று ஆசிரியர் நெல்சனது முடிவாகும்' . மற்றும், பத்தாம் நூற்றாண்டின் இறுதியில், ராஜராஜ சோழனது ஆட்சிக் காலத்து அவனது வெற்றிப்படையை பாண்டிய நாட்டிற்குள் வழிநடத்தி வந்து பாண்டிய மண்ணை சோழப் பேரரசின் அங்கமாக, சோழபாண்டிய மண்டலமாக மாற்றி இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக நிலையான ஆட்சி அமைய உறுதுணையாக இருந்த சோழநாட்டு சாமந்தர்களின் மரபினர் என இவர்களை எண்ணுவதற்கும் இடம் உள்ளது." சேதுபதி மன்னர்களது காவல் அறனாகிய திருமயம் கோட்டை பற்றிய ஆய்வுரையிலிருந்து இந்த கோட்டையின் கீழ்ப்பகுதி கி.பி. 1120-ல் விஜயரகுநாத வயிரிய முத்துராமலிங்க சேதுபதி மன்னராலும், மேல்பகுதி கி.பி. 1185-ல் முத்துராமலிங்க சேதுபதி மன்னராலும் அமைக்கப்பட்டன எனத் தெரிகிறது." பதின்மூன்றாம் நூற்றாண்டில் சோழப்பேரரசு சிதைந்து பாண்டியர்கள் வலிவும், பொலிவும் பெற்ற வல்லரசர்களாக 3) மகாவித்வான் ரா. ராகவ ஐயங்கார்-சேதுபதிகள்-செந்தமிழ் o இதழ் (1905) 4) Nelson – Manual of Madura Country (1868) by Seshadri. K. Dr. — History of Ramnad Sethupathies (1972) b) Pudukottai Durban Records. R. Dis 1/1882