பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 25.3 தச்சமல்லிக்கும், ஏம்பலுக்கும் நான்கு எல்கைகள் துலக் கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து இன்னொரு முக்கிய மான செய்தியும் தெரிய வருகின்றது. எட்டு அல்லது ஒன்பதா வது நூற்றாண்டில் சைவ சமய எழுச்சிக்கு ஊன்றுகோலாக விளங்கிய மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துறை இறைவன் காட்டதானவெல்லாம் காட்டி தன் கருணைத்தேன் காட்டி ஆட் கொண்ட இந்த தலத்திற்கு அருகில் சைவ சமயத்திற்கு எதிரான அமண் பள்ளி ஒன்று தாழங்குடியில் இயங்கி வந்துள்ளது தெரிய வருகிறது. தச்சமல்லிக்கு அருகே இருந்த பிராந்தணி மயிலு மாரி' என்ற ஊர்ப் பெயர்களும் சமணர்களது குடியிருப்பபைத் தெரிவிப்பவனாக உள்ளன. ஆதலால் தமிழகத்தின் சமரசநோக் கிற்கு வரலாற்றுச் சான்றாகவும் இந்தப் பட்டயம் அமைந் சேதுபதி மன்னரது இந்த தர்மம்-அபிஷேகம், திருமாலை, திருவிளக்கு, திருநந்தவனம், திருமடம், ஆகியவை சிறப்பாக நடைபெறுவதற்கு திருப்பெருந்துறையைச் சேர்ந்த மருத பண் டாாமும் ஏக பண்டாரமும் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு காணி ஆட்சியும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த தலத்தின் வரலாற்றுச் செய்தியை வெளிப்படுத்தும் வகையில் இந்தச் செப்பேட்டின் முதல் பக்க தலைப்பில் குருந்த மரத்தடியில் குரு வடிவாக திருப்பெருந்துறை இறைவனும் அவரிடம் தீட்சை பெறும் மணிவாசகபெருமானும் அவர்களை வணங்கி நிற்கும் பாண்டிய மன்னரது அலுவலர்களும் அரிய வரைகோட்டுச் சித்திரத்தில் தீட்டப்பெற்றுள்ளனர். இராமலிங்கம் துணை என்ற தொடருடன் முடியும் இந்தச் செப்பேட்டினை சேதுபதி மன்னரது அலுவலரான அட்டவணை சேதுராமலிங்கம் என்பவர் வரைந்துள்ளார். பூரீ ஆவுடையார் - மாணிக்கவாசகர் என்ற தலைப்புடன் தொடங்கும் இந்தப் பட்டயத்தில் எழுபத்து ஐந்து வரிகள் உள்ளன. செப்பேட்டை வரைந்தவர் பெயர் காணப்பட வில்லை.