பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 25 (விளக்கம்) 1 செப்பேடு வழங்கியவர் : கிழவன் என்ற ரகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : கிழக்கரை மீனாட்சி சொக்கநாத சுவாமி கோயில் ஸ்தானிகள் இராம லிங்க குருக்கள். 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாத்தம் 1600 காள யுக்தி வைகாசி (கி.பி. 1678) 4. செப்பேட்டின் பொருள் : கிழக்கரை துறைமுகத்து தீர்வைப் படுகிற பொருட்களில் மகமை. நமக்கு கிடைத்துள்ள ரெகுநாத சேதுபதியின் செப்பேடு களில் முதலாவது இது. இராமநாதபுரம் மன்னராக முடிசூடிக் கொண்ட முதலாவது ஆண்டில், (அதாவது இரண்டாவது மாதத்தில்) வழங்கிய செப்பேடு. அறுபத்துமூன்று விருதுகள் மன்னரது சிறப்புப்பெயராகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவை களில் பஞ்ச பாணாவதாரன்' என்ற ஒரே ஒரு புதிய விரு தினைத் தவிர, ஏனையவை ஏற்கனவே இவருக்கு முன்னர் சேதுபதிகளாக இருந்தவர்கள் செப்பேடுகளில் பொறிக்கப் பட்டுள்ளவையாகும். இராமநாதபுரம் சீமையில் உள்ள கீழக்காை முந்தைய காலங்களில் சிறந்த துறைமுகப் பட்டினமாக விளங்கியது என்ற செய்தியை இந்தச் செப்பேடு சுட்டுகிறது. ஏற்கனவே இந்த ஊர் அனுத்தொகை மங்கலம், நினைத்தது முடித்தான்பட்டினம் என்ற பெயர்களில் வழங்கி வந்தது. அங்கு பதினெண் விஷயத் தார் என்று வழங்கப்பட்ட வணிகப்பிரிவினர் வாழ்ந்து வந்தனர் என்பதும் மடிச்சீலை (கைத்தறி துணி) முத்து வாணிபத்