பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுப தி மன்னர் செப்பேடுகள் 287 மன்னர் வழங்கியுள்ள திருவாபரணம். பட்டு, பருத்தி, வெள்ளி வாகனங்கள், வெள்ளி பாத்திரங்கள் மற்றும் இதர சம்பத்துக் களையும குருக்கள் பொறுப்பேற்று, இராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்மன் திருக்கலியாணம் உற்சவம், மாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் நடைபெற வேண்டிய உற்சவங்களுக்கு காப்பு தரித்து, துவஜ ஆரோகணம் செய்து விழாக்களை முறையாக நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பது மன்னரது கட்டளை. இவைகளை நடத்தி வைப்பதற்காக குருக்களுக்கு சில மரியாதைகளையும் சலுகைகளையும் மன்னர் வழங்கி இருந்ததையும் இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. மன்னரது கோயில் கட்டளையை நிறைவேற்ற நியமனம் பெற்றவருக்கு மன்னரைப் போன்ற ஆடம்பர நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பது மன்னரது விசால மனப்பான்மையைக் காட்டுகிறது. ரகுநாத குருக்களுக்கு தண்டிகை பட்டுக்குடை , இரட்டைத் தீவட்டி, உபய சாமரம். அக்கிர தாம்பூலம், ஆகிய மரியாதை கள் ஏற்படுத்தப்பட்டு கோவிலில், கட்டளை, விசாரணை மிராசு தேவர் முத்திரை மிராசு தகுதிகளும் அளிக்கப்பட்டன. இவைகளை காணியாட்சியாக அவர் பாரம்பரியமாக அனுபவித்துக் கொள்ள வேண்டியது. இதற்காக அவர், மேலேகண்ட கிராமங்களில் இருந்து வரும் வருமானத்திலும் கோயில் சன்னதியில் கிடைக்கிற காணிக்கை ஆகிய இந்த வகையான வரவுகளில் இருந்து வருடத் திற்கு எண்ணுாறு பொன் சுவந்திரமாக எடுத்துக்கொள்ளவு ம்நெய் வேத்திய பிரசாதம், சந்தனம், காளாஞ்சி ஆகியவைகளில் பங்கு பெறுதல் விழாக்களில் பெறுகின்ற வருமானம் முழுவதையும் அனுபவித்துக்கொள்ளுதல் ஆகிய உரிமையினை இந்தச்செப்பேடு மூலம் மன்னர் வழங்கி இருந்தார் என்பதும் தெரிகிறது. தானம் வழங்கப்பட்ட கிராமங்கள் சேமனுரர் இன்றைய பரமக்குடி வட்டத்திலும் ஏனைய மூன்று ஊர்களும் திருவாடானை வட்டத் திலும் அமைந்து இருக்கின்றன. இந்த ஊர்களைத் தவிர ரகுநாத குருக்களது சொந்த உபயோகத்திற்காக மன்னர் வேறு ஊர் ஒன்றினையும் வழங்கி இருந்தார் என்பது தமக்குச் சொந்தத்திற்காக குடுத்து இருக்கிற கிராமத்தையும் (வரி 32) என்ற தொடரில் இருந்து தெரிகிறது. மிராசு என்பது பார்சி மொழிச்சொல் தொடர்ந்து வரும் உரிமை என்ற பொருளில் வந்துள்ளது. முத்திரை என்பது பணி என்பது.