பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். எம் . கமா ல் - தொடர்ந்து பதினாறாவது நூற்றாண்டிலும் இராமேசுவரம் திருக்கோயிலுக்கு சேதுபதி மன்னர்கள் நிலக்கொட்ை வழங்கிய விபரங்களை கி.பி. 1500, கி.பி. 1540 வருடத்திய கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இன்னொரு வரலாற்றுச் செய்தி மூலம் அன்றைய சேதுபதி ஆட்சியை அறிந்து கொள்ள முடிகிறது. அதாவது இராமேசுவரம் செல்லும் நெடுஞ்சாலையில் வேதானை கிராமத்தில் கோட்டையொன்றை அமைத்து இராமேசுவரம் செல்லும் பயணிகளுக்கு போர்த்துக்கீசிய பரங்கி கள் தொல்லைகள் கொடுத்து வந்ததுடன் பயணிகளிடம் பலவந்தமாக தலைவரி ஒன்றையும் வசூலித்து வந்ததை, மதுரையில் உள்ள விஜயநகரப் பேரரசின் நாயக்கப்பிரதிநிதி களுக்கு தகவல் கொடுத்தும் அவரிடமிருந்து இராணுவ உதவி பெற்றும் இந்தப் பரங்கிகளை கி.பி. 1549ல் சேதுபதி மன்னர் துரத்தியடித்த செய்தியும், வரலாற்றில் உள்ளது. மேலும் கி.பி. 1605 வரை எட்டையபுரம் பாளையக்காரராக இருந்த ஜகவீர எச்சிலப்ப எட்டப்ப நாயக்கர், மறவர் சீமையின் மன்னரை நம்பிபுரத்தில் (கமுதி வட்டம்) பொருதி தோற்கடித்தார் என்ற செய்தி எட்டையபுரம் வரலாற்றில் காணப்படுகிறது: " . இந்தப் போர் பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்று இருத்தல் வேண்டும். இந்த வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து கிழக்கு கடற் கரைப் பகுதியில் சேது மன்னர்களது ஆட்சி, பதினான்கு, பதி னைந்து, பதினாறாவது நூற்றாண்டுகளில் நிலவிவந்த விவரம் விளக்கமாக இல்லையென்றாலும் குறிப்பாக உள்ளது. அடுத்து மதுரையில் நாயக்கமன்னர் ஆட்சிநிலை நிறுத்தப்பட்டு மதுரை மன்னர்களுக்கும் சேதுபதிகளுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்ததால், சேதுபதிகளைப்பற்றிய கூடுதலான விவரங்கள் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, தொடராக கிடைத்துள்ளன. 20) இராமேசுவரம் குடமுழுக்கு மலர் (1975) பக்கம் 186 2 1 ) Rev. Fr. Heras – Araveedu dynasity - Foot Note pp 156 22) Ganapathia pillai – W.E - Ettayapuram Past and Present