பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 எஸ் எ ம் கமால் == வட்டத்தில் அமைந்துள்ளது. முன்னர் ஏழுர் நாட்டு ஒரூர் வட்டகையில் இருந்ததாக செப்பேடு வரிகள் 31,32 தெரிவிக் கின்றன. மேலும் இந்த மயேச்சுர பூஜைக்காக சேதுநாடு முழு வதும் மகமை ஒன்றினை மன்னர் ஏற்படுத்தியதையும் இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. சேதுபதிச் சீமையின் எட்டு மாகாணங்களிலும் உள்ள சுங்கத்துறையில் பொதி ஒன்றுக்கு மாகாணிப்பணமும் பெரிய ஊர்களில் அரைமாகாணிப் பணமும், சந்தைப் பேட்டையிலும் இதர இடங்களிலும் கடையொன்றுக்கு மாதம் அரைக்கால் பணமும், துறைமுகத்தில் நெல் கண்டி ஒன்றுக்கு மூன்று மாகாணிப்பணமும், ஏனைய பகுதிகளில் அரை மாகாணியும், தீர்வை விதிக்கப்பட்ட ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்களுக்கு பொதி ஒன்னுக்கு அரை மாகாணிப்பணமும், உப்பளத்தில் பொதி ஒன்னுக்கு அரைக்கால் பணமும், பிற இடங்களில் அரை மாகாணிப் பணமும், பட்டறையில் நூறு பொன்னுக்கு கால் பணமும், மகமை ஏற்படுத்தப்பட்டது. தானியங்களைப் பொறுத்த வரையில் பண்ணைக்கிராமம், சீவிதக்கிராமம், கோயில் கிராமம், பிரமதாயக் கிராமம் ஆகியவைகளில் விளைஞ்ச நிலத்துக்கு, ஒரு மாவிற்கு குறுணி நெல்லும் புஞ்சைத் தட்டிற்கு மூன்றுபடி தவசமும் மகமையாகப் பெற்றுக் கொள்ள பண்டார சன்னதிக்கு இந்தச் செப்பேட்டில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்தச் செப்பேட்டில் குறிப்பிடப்படும் பணம் எத்தகைய நாணயம் என்பதற்கு குறிப்பு எதுவும் இல்லை. ஐம்பத்து மூன்று வரிகளைக் கொண்ட இந்தச் செப்பேட்டில் தலைப்பில் ஆவுடையார் கோவிலுக்கு இயல்பான வரை கோட்டுச் சித்திரம் காணப்படவில்லை.