பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சிவகுமார முத்துவிஜய ரெகுநாதசேதுபதி (கி.பி. 1736 -1748) கி.பி. 1736ல் இராமநாதபுரம் அரியணை ஏறிய இந்த மன்னர் சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் இராமநாதபுரம் சீமையில் திறமையுடன் ஆட்சி செலுழ்தி அமைதி காத்தார். தமது தந்தையைப் போன்றே தெய்வீகத் திருப்பணிகளிலே மிகவும் நாட்டம் கொண்டிருந்தார். சேது வழிப் பாதையில் பாம்பன், அக்காள் மடம், இராமேசுவரம் ஆகிய மூன்று ஊர் களிலும் அன்ன சத்திரங்களை நிறுவி சேதுயாத்திரை செல்லும் பயணிகளது சிந்தை நிறைவு பெறும் வகையில் உணவும் உறையுளும் வழங்க ஏற்பாடு செய்தார். மேலும் சேது பாதை யில் உப்பூரில் சீதாராமய்யர் என்பவர் ஏற்படுத்திய தர்மச் சத்திரமும் இராமேஸ்வரத்தில் இடைக்குல மக்கள் நிறுவிய நந்த கோபாலச்சத்திரமும், பரமக்குடியில் நாகப் பன்செட்டி ஏற்படுத்திய அன்ன சத்திரமும் நொடித்த நிலையில், அவை களை மேற்கொண்டு அவைகளின் அன்னப்பணி தொடருமாறு செய்தார். இந்த மன்னர் சைவத்திலே அழுத்தமான பற்றுடைய வராக இருந்ததால், மக்கள் இதுவரை அன்புடன் சைவத்துரை என்று அழைத்து வந்தனர். ஆனால் இவரது சைவப்பற்று