பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 509 ராவுத்தர் துரைமக்கள், தேவர், பாளையக்காரர், தண்டடிக் காரர், ஊழியக்காரர், என்ற பிரிவினர்களையும், அம்பலக்காரன், சொத்துக் கணக்கன் என்று கிராம அலுவலர்களையும் இந்தச் செப்பேடு இனங்காட்டுகிறது. திருக்கோயில்களுக்குத் தானம் அளிக்கப்பட்ட நிலங்கள் தேவதாயம் என்றும் பிராமண உத்தமர்களுக்குச் சர்வமானியமாக வழங்கப்பட்டவை பிரம்மதாயம் என்றும் நிலச்சொந்தக் காரர் களால் நேரடி விவசாயத்தில் இருந்த பெரும் பரப்பு நிலம் பண்ணை என வழங்கப்பட்டது. சிறு திரட்டு என்ற சிறு அள விலான நிலம் சிறு தேட்டு எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதுவும் சொந்த நில வகையினது. செப்பேட்டுச் சம்பந்தப்பட்ட சாரு ஊரனேந்தல் கிராமம் இன்றைய திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ளது. வருவாய்த்துறைப் பதிவுகளில் இந்த ஊர் சாருவனேந்தல் என்ற பள்ள மடம்' எனக் காணப்படுகிறது. இந்தப் பட்டயத்தின் ஒம்படைக் கிளவியாக ஆயிரத்தெட்டு சிவாலயத்தில் வைத்த விளக்கை அணைத்த பாவமும்’ ’ (வரிகள் 85, 86) என்று குறிப்பிட்டிருப்பது புதிய பிரயோகம்.