பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 எஸ். எம். கமால் =- --- so குடிமக்கள் பெயர் - வனங்காமுடி, வேல் வாங்கினான், தம்பிராமன், தம்பிநயினான். குடிகள் - பள்ளு, பறை, இடை, குடி, பட்டுநூல் காரர், பனையேறி, சாணான், ஈழம் புஞ்சைக்காரர், சோனகர், செட்டி, வானியர். நிலங்கள் - காடுவெட்டிப் புஞ்சை, பஞ்சந்தாங்கி வயல், பொன்மாரி வயல், வனங்கா முடித் தோட்டம், பனங்கூடல், கள்ளி அடந்தல், கடைக்கொம்பு, பொருத்துக் கரை, ஊடுபாதை , தேரி, தொண்டாலி, ஒநாய் பொட்டல், நரிகுமிச்ச திடல். இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள எண்பத்தொன்பது செப்பேடுகளில் அறுபத்து ஆறு நிலக்கொடை பற்றியவை. திருக் கோயில்கள், மடங்கள், அன்னசத்திரங்கள் மற்றும் தனியார்களுக்கு வழங்கப்பட்டவைகள். இவைகளில் நாற்பத்திதெட்டு செப்பேடுகள். நாற்பத்தெட்டு ஊர்கள் வழங்கியதையும், பதினோரு செப்பேடுகள் ஒருவருக்கு இரண்டு ஊர்களாக இருபத்திரண்டு ஊர்கள் வழங்கப்பட்டதையும், மூன்று செப்பேடுகள் மூவருக்கு மூன்று ஊர்களாக ஒன்பது ஊர்கள் வழங்கியதையும் இரண்டு செப்பேடுகள் இருவருக்கு ஐந்து ஊர்களாக பத்து ஊர்கள் வழங்கியதையும், ஒரு செப்பேடு ஒருவருக்கு ஆறு ஊர்கள் வழங் கியதையும், தெரிவிக்கின்றன- பிறிதொரு செப்பேட்டில் இருபத்து எட்டு ஊர்கள் திருப்புல்லாணி கோயிலுக்கு மட்டும் வழங்கப் பட்டுள்ளது. ஒரே ஒரு செப்பேட்டின் மூலம் (செ எண் 67) பத்து பேர்களுக்கு கூட்டாக ஒரே ஊரில் நிலக்கொடை வழங்கப் பட்டுள்ளது, இது இன்றைய நிர்வாகத்தில், வருவாய்ப் பதிவேடு களில் உள்ள கூட்டுப்பட்டா முறையை நினைவூட்டுவதாக உள்ளது. இங்கனம் தானமாக வழங்கப்பட்ட ஊர்களின் பட்டியல் இணைப்பு 'அ' வில் கொடுக்கப்பட்டுள்ளது, சில செப்பேடுகளில் தானம் பெறுபவர்களது பெயர்கள் குறிப்பிடப்படாமல் வரையப்பட்டுள்ளன. இராமேசுவரம் பஞ்ச தேசத்து ஆரியர்களுக்கும் (செ எண் 2) காக்குடி கணபதியேந்தல் மகாஜனங்களுக்கு (செ. எண் 40) சின்ன நாட்டான், பெரிய