பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 68 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துராமலிங்க விஜய ரெகு நாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் பண்டித புருஷோத்தம்தாஸ் - சத்திரம் திருப்புல்லாணி 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1702 பிலவ தை மாதம் 15ந் தேதி (கி. பி. 24-1-1782) 4. செப்பேட்டின் பொருள் மேலேகண்ட சத்திரத்திற்கு கழுதீர் மங்கலம் கிராமம் சர்வ மான்யம். முத்துராமலிங்க சேதுபதி மன்னரது விருதாவளியாக முப்பத்து ஒன்பது சிறப்புப் பெயர்கள் இந்தப்பட்டயத்தில் இடம் பெற்றுள்ளன. இவைகள் அனைத்தும் முந்தைய செப்பேடுகளில் காணப்பட்டவை ஆகும். இராமநாதபுரத்திற்கு அண்மையில் உள்ள திருப்புல்லானி, வைணவர்களது சிறந்த திவ்யசேத்திரம் ஆகும். இங்குள்ள பெருமாள் கோயிலினை திருப்பணி செய்த சேதுபதிகள் கோயில் வழிபாட்டிற்கும் உடலாக பல ஊர்களை வழங்கியுள்ளனர். இந்த ஊருக்கு வருகை தருகின்றன. வைணப் பிராம்மணர்களது பசி தீர்க்கும் பணியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் பண்டித புருஷோத்தம்தாஸ் என்ற வடநாட்டார் ஒரு சத்திரத்தை அங்கு ஏற்படுத்தினார். இந்த மன்னரது ஆட்சிக் காலத்தில் அந்த அன்னசத்திரத்தின் பணி தடைபடும் நிலையில், மன்னர் முது