பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 எஸ். எம். கமால் குளத்துார் வட்டம் சிக்கலையடுத்துள்ள கழுநீர் மங்கலம் என்ற கிராமந்தை சர்வமான்யமாக இந்தச் சத்திரத்திற்கு வழங்கி யுள்ளதை இந்த செப்பேடு தெரிவிக்கின்றது. அந்தக் கிராமத் தின் அரசிறையாக தண்டல் செய்யப்பட்ட நிலவரி, இடங்கை வரி, வலங்கை வரி, கீதாரம், கரைமணியம் என்பவையும் இந்த செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஊருக்கு வருகை தருகின்ற பக்த கோடிகளுக்கு திங்கள் தோறும் துவாதசி அன்று உணவு வழங்குவதற்காக முந்தைய சேதுபதி மன்னரது பிரதானியான வெள்ளை சேர்வை என்பவர் ஏற்படுத்திய அன்னசத்திரமும் இங்கு அமைந்துள்ளது. அந்த தர்மத்திற்காக முந்தைய சேதுபதி மன்னர், செல்லமுத்துத் தேவர், காஞ்சிரங்குடி என்ற கிராமத்தை சர்வமான்யமாக வழங்கியுள்ளார். இவ்விதம் அன்னதாதாக்களாக விளங்கிய சேது மன்னர்களை அருள் தமிழால் பாடி மகிழ்ந்து இருப்பது வெறும் புகழ்ச்சி இல்லை. மேலும், இதே நூற்றாண்டில் இராமசுவர தலயாத்திரை செய்து திரும்பிய திருவாங்கூர் மன்னர், இந்த திருக் கோயிலுக்கு வருகை தந்ததுடன் கோயில் இறைவரது பாயசக் கட்டளைக்கு அண்மையில் உள்ள காக்கூர் கிராமத்தை சேது மன்னரிடம் கிரையம் பெற்று இதே திருக்கோயிலுக்கு தானம் வழங்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கேரள மன்னரது திருப்புல்லாணி வருகை, திருப்புல்லாணி தொண்டி நாடகம் என்ற சிற்றிலக்தியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.: t புலவர். வீரராகவ ஐயங்கார் - திருப்புல்லாணி தொண்டி நாடகம் செந்தமிழ் தொகுதி 47(1951)