பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 73 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி. 2. செப்பேடு பெற்றவர் : இராமநாதபுரம் அய்யாச்சாமி குருக்கள் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1703 பிலவ ஆண்டு தை மாதம் (கி.பி. 13-1-1782) 4. செப்பேட்டின் பொருள் : இராமநாதபுரம் முத்துராமலிங்க சுவாமி ஆலயத்திற்கு இரண்டு ஊர்கள் சர்வமானியம். இந்தச் செப்பேட்டை வழங்கிய மன்னரது விருதாவளியாக முப்பத்து ஒன்பது சிறப்புப் பெயர்கள் புொறிக்கப்பட்டுள்ளன. 'செங்காவிக் கொடைமேல் கவரி மயிர் வைச்ச விருதுடையான் இரணிய கற்ப சுதாகரன் வெள்ளானை, வாகனன் என்ற புதுப்பெயர்களைத் தவிர ஏனையவை இந்த மன்னரது முந்தைய செப்பேடுகளில் காணப்பட்டவையாகும். இரணிய கற்ப வேள்வி. செய்த ரெகுநாத திருமலை சேதுபதியின் குமாரன்' என்ற முறையில் இரணிய கற்ப சுதாகரன் என்ற சிறப்புப் பெயரும், அஷ்ட ஐஸ்வரியங்களைக் கொண்ட தேவேந்திரனது வெள்ளை நிற யானையை உடையவன் என்ற சிறப்புப் பெயரும் வநதுளளன. f Rajaram Row T. Manual of Ramnad Samasthanam (1891) page 3 27