பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 எஸ். எம். கமால் -- ஆவணங்கள் இல்லை. கிடைத்துள்ள பதிவேடுகள் வழி அறியத் தக்க சேது மன்னர்கள் அறக்கொடைகள் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. - * 1. தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகப் பதிவேடு . . . . 400 2. சென்னை அரசு அருங்காட்சியப் பட்டியல் ... 13 3. இராமநாதபுரம் சமஸ்தான நிலமானியப் பதிவேடு . . . 58 4. ரெங்காச்சார்யாவின் கல்வெட்டுப் பட்டியல் ... 31 5. இந்திய அரசு அகழ்வுத் துறைத் தொகுப்பு ... 15 6. புதுக்கோட்டைச் சீமைக் கல்வெட்டுத் தொகுப்பு : ... 9 7. புதுக்கோட்டைச் சீமை வரலாறு ... 1 8. இராமநாதபுரம் சமஸ்தான மேன்யுவல் ... 49 9. சேதுமன்னர் கல்வெட்டுக்கள் H = H 8 10. சேதுமன்னர் ஒலைப்பட்டயங்கள் ... 10 மொத்தம் ... 594 ஆனால் இந்த 594 அறக்கொடைகளை முழுமையாக தொகுத்து வெளியிடக்கூடிய வாய்ப்பு நமக்குக் கிட்டவில்லை. அவைகளுக்கான மூல பட்டயங்களும் கிடைக்கவில்லை. டாக்டர். பர்ஜசும் பண்டித நடேச சாஸ்திரியும் இந்த அறக்கொடைகளில் 15 பட்டயங்களை முழுமையாக வெளியிட்டுள்ளனர்". இதற்குப் பின்னர் சரியாக 86 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 1975-ல் நடைபெற்ற இராமேஸ்வரம் திருக்கோயில் குடமுழுக்கு விழா வினையொட்டி மிகுந்த பிழையுடன் முப்பத்து ஒன்று பட்டயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவைகளில் இருபத்துஆறு மட்டும் சேது மன்னர்கள் வழங்கியவை. மூன்று பட்டயங்கள் நிறைவு பெறாத சிதைந்து போன செப்பேடுகள். மூன்று பட்டயங்கள் இந்திய அரசுத் துறையின் அகழ்வுத் துறைத் தொகுதியில் இடம் பெற்றவை. இவை நீங்கலாக குடமுழுக்கு விழா மடலில் காணப்படும் இருபது பட்டயங்களுடன், கடந்த பல ஆண்டுகளாக சொந்த முயற்சியில் சேகரிக்கப்பட்டவை 49 இவைகளில் ஐந்து முழுமையாக இல்லை. எஞ்சியுள்ளவைகளையும் ஒன்றாகத் தொகுத்து மொத்தம் எண்பத்து ஒன்பது பட்டயங்களின் தொகுப்பாக இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது. 7. Asst VoI. IV (1886) pp. 68-104