பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 எஸ். எம். கமால் நாட்டுப்பிரிவுகள் : சேதுபதிகளின் சீமை, முந்தைய சோழ பாண்டிய நிர்வாக அமைப்புகளைப் போன்று பலவிதமான எல்லைக் கூறுகளாகப் பிரிவினை செய்யப்பட்டு இருந்தன. (செப்பேடு எண்கள் : 15, 17, 39) இந்த மன்னர்கள் வழங்கிய சர்வ மானிய கிராமங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள நான்கு எல்லைகள் இருந்து சேது நாட்டில் கீழ்க்கண்ட நிலக்கூறுகள் முன்னர் அமைந்து இருந்தது தெரிய வருகிறது. பெரிய அளவிலான நிலக்கூறு சீமை நாடு ' என்றும் சிறு கூறுகள் கூற்றம்’ பற்று என்று வழங்கப் பட்டன. அவைகளில் சில : சிமைகள் : 1. திருவாரூர் சீமை 8. காளையார்கோவில் சீமை 2. பட்டுக்கோட்டை சீமை 9. சிவகங்கைச் சீமை 3. அறந்தாங்கி சீமை 10. கமுதைச் சீமை 4. சூரக்குடி சீமை 11. இராமநாதபுரம் சீமை 5. அஞ்சிரண்டு சீமை 12. திருவாடனைச் சீமை 6. வெள்ளாம்பற்றுச் சீமை 13. புதுக்கோட்டைச் சீமை 7. மேலமாகாணச் சீமை நாடுகள் 1. ஆப்பனுார் நாடு 8. குறிச்சி நாடு 2. செவ்விருக்கை நாடு 9. ஏழுர் நாடு 3. கீட்செம்பி நாடு 10. சூரக்குடி நாடு 4. கைக்கி நாடு 11. தென்னாலை நாடு 5 பருத்திக்குடி நாடு 12. தேர்போகி நாடு 6. கிடாத்திருக்கை நாடு 13. முத்தத்து நாடு 7. கிழக்கு வளநாடு 14. வடதலைச் செம்பிநாடு கூற்றங்கள் 1. துகலுர் கூற்றம் 3. நடுவில் கூற்றம் 2. அரும்பூர் கூற்றம் 4. மிழலைக் கூற்றம் பற்றுகள் 1. சிக்கில் பற்று 4. அஞ்சுகோட்டை பற்று 2. கைக்கி நாட்டு பற்று 5. குமாரணி பற்று 3. வெள்ளாம் பற்று 6. அமரடக்கிப் பற்று