பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 47 வட்டகை 1. கிடாரம் வட்டகை 4. காக்கூர் வட்டகை 2. கைக்கிநாட்டு வட்டகை 5. அமரடக்கி வட்டகை 3. ஒரூர் வட்டகை ւլՄճվ - 1. இடிகரைப் புரவு 4. சேமனுார் புரவு 2. கப்பலூர் புரவு 5. பெருங்காட்டுப்புரவு 3. திருவெற்றியூர் புரவு 6. குமரி ஏந்தல் புரவு இந்தப் பிரிவுகளைத் தவிர, இந்தப் பிரிவுகளின் பகுதி யைக் குறிப்பிடுவதற்கு வட்டாரம், வட்டகை, தட்டு என்ற சொற்களும் வழக்கில் இருந்து வந்தது தெரிய வருகிறது. இவையனைத்தும் சேதுபதிகளில் இறுதி தன்னாட்சி மன்னராக இருந்த முத்துராமலிங்க விசைய ரகுநாத சேதுபதி ஆட்சிக் காலம் வரை நீடித்தது. அந்த மன்னரை பதவி நீக்கம் செய்து சிறையிலிட்டு ஆங்கிலேயர்கள். இந்த தன்னரசின் சிறப் டினைக் குலைத்து கி.பி. 1803-ல், இராமநாதபுரத்தை ஜமினாக மாற்றம் செய்து (கி.பி. 1844-ல்) புதிய நில அளவை முறையை புகுத்தியதும் இந்த நாட்டின் தொன்மையான இந்த நிலக்கூறு களும், அவைகளை அறுதியிட்டுச் சொல்லக்கூடிய குலப்பிரமான அளவு முறையும் மறைந்து விட்டன. நிலங்கள் : பொதுவாக இராமநாதபுரம் அரசுப்பகுதியில் அமைந்த பூமி, செவ்வல், கரிசல், பொட்டல், மணற்காடு என்று இயற்கைத் தன்மையை ஒட்டி வழங்கப்பட்டது. இவைகளில் நஞ்சை, புஞ்சை, தட்டு, வயல், தோட்டம் என்ற பகுப்புகள் இருந்தன. நீர்ப்பாசன வசதி உள்ளது. நஞ்சை எனவும், அவ்வித வசதி இல்லாது வானம் பார்த்த பூமி புஞ்சை என்றும் கருதப்பட்டது. சிறிய நீர் ஆதாரங்களைக் கொண்டு, விவசாயம் செய்யப்படும் நிலம் வயல், தட்டு, தேட்டு, என்றும் கேணி, கிணறு போன்ற சுருங்கிய நீர் வசதியுடைய விவசாயப்பகுதி தோட்டம் என்றும் வழங்கப்பட்டன. புதிதாக அமைக்கப்பட்ட தோட்டம் செய், ஆக்கல் என்ற பெயர்களும் இருந்தன. திருவாடனை வட்டத்தில் ஆக்கலூர் என்ற ஊர்.இருப்பது.சிந்திக்கத்தக்கது இந்தநிலங்களின்