பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 14 எஸ் எம் . கமால் --- - யாற்றுக் கரையில் உள்ளது. ஆனால் முந்தைய நிலக்கூற்றில் இந்தக் கிராமம் செவ்விருக்கை நாட்டில் அமைந்துள்ளதும் தெரிய வருகிறது. அக்கிரகாரப் பிரதிஷ்டைக்காக இந்த தானம் வழங்கப் பட்டதால் தானம் பெற்றவர் யார் என்பதை இந்தச் செப்பேடு குறிக்கவில்லை. ஆதலால் இந்த தானத்தைப் பெற்றவர் பால சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகிகள் என்பதை ஊகித்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது. இந்தச் செப்பேட்டில் தானம் வழங்கிய சேதுபதி மன்னரைக் குறிக்கும் பொழுது ரெகுநாத சேதுபதி காத்த தேவரவர்களது “ ‘புத்திரன் முத்து விஜய ரெகுநாத சேதுபதி காத்த தேவரவ களது புத்திரன்’ குமாரமுத்து ராகுநாத சேதுபதி காத்த தேவர்கள் என (வரிகள் 30-32) வரையப்பட்டுள்ளது. ஆனால் இராமநாதபுரம் சேது மன்னர்கள் பற்றிய பல்வேறு ஆவணங்கள் முத்துவிஜய ரெகுநாத சேதுபதி, கிழவன் என்ற ரெகுநாத சேதுபதியின் மருகர் என்றும் மகன் என்றும் குறித்துள்ளன, முந்தைய இரு சேதுபதி மன்னர்களுக்கும் ஆண்வாரிசு இல்லை முத்துவிஜய ரெகுநாத சேதுபதிக்கும் ஆண்வாரிசு இல்லை. திருமலை ரெகுநாத சேதுபதி, வழியில் வந்தவர் குமாரமுத்து விஜய ரெகு நாத சேதுபதி ஏற்கெனவே கிழவன் சேதுபதியின் கி.பி.1678ஆம் ஆண்டு பட்டயத்தில் (செப்பேடு எண் 23) கண்ட வாறு முந்தைய மன்னரது புத்திரனாக இல்லாவிட்டாலும் அடுத்து வந்த சேதுபதி முந்தைய மன்னரது புத்திரனாக தம்மைக் குறிப்பிட்டுக் கொள்ளவது இராமநாதபுரம் அரண் மனையின் சம்பிரதாயமாக இருந்து வந்துள்ளது. தந்தை - மகன் என்ற உறவு நிலை இரத்தக் கலப்பினால் ஏற்படுவது போல சேது நாட்டு அரியாசனத்தில் அமரும் மன்னரும், தமது கடமையின் காரணமாக முன்னர் இருந்த மன்னரது மைந்தா ராகின்றார்.