பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/834

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 62 (விளக்கம்) செப்பேடு வழங்கியவர் : முத்துவிஜய ரெகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : வித்வத் மகாஜனங்கள் 3. செப்பேட்டின் காலம் : சகம் 1684 சுக்கிரபானு அர்பசி (கி.பி. 17-10-1762) 4. செப்பேட்டின் பொருள் : சின்ன நாட்டாண், பெரிய நாட்டாண் கிராமம் தானம். இந்த தானத்தை வழங்கிய முத்துவிஜய ரெகுநாத சேதுபதியின் விருதாவளியாக எழுபத்து ஆறு சிறப்புப் பெயர்கள் இந்தச் செப்பேட்டில் வரையப்பட்டுள்ளன. அவைகளில் மதுரை ராசசிங்கம், மகுடவர்த்தனர் வேந்தன் என்ற இருவிருதுகள் மட்டும் புதியவை, மன்னர் பெயரும் முத்துராமலிங்க விஜய ரெகுநாத சேதுபதியென சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. செம்பிநாட்டின் தென்பகுதியான சிக்கல் பத்தில் உள்ள சின்ன நாட்டான் பெரியநாட்டான் என்ற ஊரினை வித்வத் மகாஜனங்களுக்கு சேதுபதி மன்னர் தானம் கொடுத்ததைச் சொல்லும் ஆவணமாக இந்தச் செப்பேடு அமைந்துள்ளது. இந்த ஊர் இன்றைய முதுகுளத்துார் வட்டப்பகுதியில் இருந் திருக்க வேண்டும். ஆனால் இன்று அந்த ஊர் இல்லை. ஆனால் இந்த ஊருக்கான பெருநான் கெல்கையாக குறிப்பிடப்படும் தத்தங்குடி பண்ணந்தை ஆய்க்குடி ஆகிய ஊர்கள் இன்றும் வழக்கிலுள்ளன. இந்தச் செப்பேட்டின் வரி