பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/915

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 76 -- (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துராம லிங்க விஜயரெகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : இராமநாதபுரம் கிருஷ்ண அய் யங்கார் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1706 சோபகிருது (கி.பி. 10-4-1783) 4. செப்பேட்டின் பொருள் : செப்பேடு கொண்டான் என்ற கிராமம் சர்வமான்யம் இந்த மன்னரது விருதாவளிகளாக அறுபத்து இரண்டு சிறப்புப் பெயர்கள் இந்தச் செப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளில் அநேக பிரம்ம பிரதிஷ்டாபகரன்' ஒரே ஒரு சிறப்புப்பெயர் மட்டும் புதுமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் நகர் சேஷாத்திரி அய்யங்கார் மகன் கிருஷ்ணண அய்யங்கார் என்பவருக்கு முத்துராமலிங்க பூபால புரம் என்ற செப்பேடு கொண்டான் கிராமம் தானம் வழங்கப் பட்டதை இந்தச் செப்பேடு குறிக்கின்றது. இந்த ஊருக்காக குறிப்பிடப்பட்ட எல்கைகளிலிருந்து இந்த ஊர் இன்றைய இராமநாதபுர மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் இருந்தது தெரிய வருகிறது. ஆனால் இந்த ஊர் இன்று வழக்கில் இல்லை ஆனால் முந்தைய நிலக்கூறான கைக்கி நாட்டில் இருந்ததை கைக்கி நாட்டு பத்தில்’’ என இச் செப்பேட்டில் குறிக்கப் பட்டுள்ளது.