பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 69 நாதபுரம் மேன்யுவலில் இடம் பெற்றுள்ளன. குறித்த நாளன்று எல்லைவிருத்தி நீராடி புத்தாடை புனைந்து கிராம தெய்வத் திற்கு ஆட்டுக்கிடாய் ஒன்றினை பலியிட்டு அதன் உதிரம் பெருகும் தலையைக் கொண்ட சட்டியைக் கையில் ஏந்தியவாறு எல்லைத் தகராறு இடத்திற்குச் செல்வார். குடி மக்களது வாய் மொழியினைக் கேட்டு சரியான எல்லையை அவர் காண்பிப்பார். கிராம தெய்வமே வந்து வாக்குச்சொன்னதாக இரு தரப்பினரும் அவரது தீர்ப்பை ஏற்றுக்கொள்வர். இந்தக் கடமையில் ஒரு தலைச் சார்பாக முடிவு மேற்கொண்டால் அதற்கான தெய்வ தண்டனை அவருக்கு உறுதி என்பதை உரக்க சொல்லிய பின்னர்தான் இந்தத் தீர்ப்பினை அவர் வழங்குவது உண்டு. நியாயத் தீர்ப்பு மனுநீதி என்பது மனுநீதிச் சோழன் ஆட்சி செய்த சோழ நாட்டிற்கு மட்டுமல்லாமல் அந்நாட்டை பலவகைவிலும் முன் மாதிரியாகக் கொண்டு ஆட்சி நடத்திய சேதுபதி நாட்டிலும் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கையாகும். மக்களது அல்லவை நீக்கி நல்லவை சேர்க்கும் பணியில் தமது மருமகன் (பெண்மக்களது கணவர்) குற்றவாளி எனத் தெரிந்ததும் தயங்காமல் மரண தண்டனை வழங்கினார் முத்துவிஜய ரெகுநாத சேதுபதி என வரலாறு தெரிவிக்கின்றது. . இந்த மன்னரது மறைவுக்கு பின்னர் கி. பி. 1745-ல் குமாரமுத்து விஜய ரெகுநாத சேதுபதி ஆட்சியில் சிக்கலான வழக்கு ஒன்று எழுந்தது. இராமேஸ்வரம் லட்சுமண தீர்த்தத்தின் வருவாய்களை அனுபவிக்கும் உரிமைபற்றியது அந்த வழக்கு, அன்றைய சமுதாயத்தில் மிகச் சிறந்த கல்விமான்களாகவும் புனிதப் பெருமக்களாகவும் கருதப்பட்ட இராமேஸ்வரம் தமிழ் ஆரியமகாஜனங்களும். மராட்டா குருக்களும் அந்த உரிமையினை தத்தமதாகக் கோரினர். தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள முடியாத இந்தப் பூசலைத் தீர்வுகாண சேதுபதி மன்னரது அரசபைக்கு எடுத்துச் சென்றனர். வேதமும் வியாகர்ணமும் பயின்ற அந்தப் பெருமக்களுக்கு சரியான நியாயத் தீர்வு வழங்க சாதாரண மக்களைக் கொண்ட நடுவர் குழு ஒன்றினை நியமனம் செய்து வழக்கும் தீர்வு பெறுமாறு சேதுபதி மன்னர் உத்தர விட்டார். 21. Rajaram Rao. T. Manual of Ramnad Samasthanam (1891) р. 237