பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 எஸ். எம். கமால் வினர் ஏற்றிப்போற்றும் வகையில் சிறப்புடன் பிராமணர்கள் அன்று வாழ்ந்து வந்த பொழுதும் அவர்களது கடமைகளைச் செய்து முடிப்பதில் ஏனையவர்களை விட தங்களுக்கென சிறப் பான சலுகையெ, னையும் கோரவில்லையென்ற செய்தியை கி.பி. 1631ஆம் ஆண்டுச் செப்பேடு ஒன்று தெரிவிக்கின்றது. (செ. எண் 8) o - இராமேஸ்வரம் திருக்கோயிலின் அன்றாட இறை பணி களை நிறைவேற்றி வைப்பதில் பலநூறு பணியாளர்கள் ஈடு பட்டு இருந்தனர். கி.பி. 1772 ஆம் ஆண்டு பட்டயத்தின் படி அவர்களில் ஆரியமகாஜனங்கள் மட்டும் ஐநூற்று பன்னிரண்டு பேர். 'காலாகாலங்களில் பூஜை பண்ணாமல் இருந்தாலும் கோயிலை அடைத்தாலும் இராஜமுத்திரைக்குக் கட்டுப்படாம லிருந்தாலும் ... ... ... ... ஆயிரத்திநூறு பொன்னும் இறுத்து எங்களது காணி ஆட்சியையும் இழந்துபோகக் கடவோமாகவும் என அவர்கள் இசைவுமுறியில் இணக்கம் தெரிவித்து கைச் சாத்திட்டிருப்பது கோயில் பணியினை நிறைவேற்றி வைப்பதற் கானநியதிகள் அந்தணருக்கும் அந்தணர் அல்லாதாருக்கும் ஒரே சீராக நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது தெரிய வருகிறது. எல்லைத் தகராறுகள் : - நிலம், பொலி, புரவு பற்றிய சரியான எல்லைகள் அப் பொழுது நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன. ஐப்பசி, புரட்டாசி மாதப் பெருமழை, வெள்ளம், ஆடி மாதப் பெருங்காற்று, 'போன்ற காரணங்களினால் நிலங்களில் நாட்டப்பட்டிருந்த குழிக்கல், குத்துக்கல், எல்லைக்கல், ஆகியவை இடம் மாறும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் வேளாண்மைக் காலங்களில் குடிமக்களிடையே குரோதமும், பூசல்களும், எழுவதற்கு இவை காரணமாகவிருந்தன. இதனைத் தவிர்ப்பதற்காகச் சேது மன்னர்கள் சில ஊர் களில் எல்லைவிருத்தி என்ற அலுவலரை நியமனம் செய்திருந் தனர். இவரது பணி, சம்பந்தப்பட்ட குடிகளுடன் தகராறுக்குட் பட்ட பொலி அல்லது புரவிற்குச் சென்று சரியான எல்லையைக் காண்பித்துக் கொடுப்பது ஆகும். இவரது முடிவை இரு தரப் பினரும். ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது கட்டாயம். இந்த அலுவலர் அவரது பணியை நிறைவேற்றிய விபரங்கள் இராம